பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. உறையூர் இளம்பொன் வணிகனுர் சோழர் பேரரசின் பழஞ்சிறப்பு வாய்ந்த தலைநகர் உறையூர்; உறையூர் தமிழ் நூல்களில், உறங்தை என வழங்கப் பெறும்; உறையூர்க்குக் கோழி என்ற மற்ருேர் பெயரும் உண்டு. கோழியொன்று யானையொடு போரிட்டு வென்ற இடமாதல் சிறப்பறிந்து அதற்கு அப்பெயர் வந்தது; இவ்வரலாறு விளங்க, முறஞ்செவி வாரணம் முன் சமமுருக்கிய புறஞ்சிறை வாரணம்’ என இந்நகரை அழைப்பர் இளங்கோவடிகள் உறையூர் காவிரியின் கரைக்கண் அமைந்து, அதனுல் வளம்பெற்றுப் பயனுற் றது; “காவிரிப் படப்பை உறந்தை' உறையூர் செல்வத் தாற் சிறந்தது; மாடமாளிகைகள் மலிந்தது; உறந்தை யன்ன நிதியுடை நன்னகர்', 'உறந்தையன்ன பொன் லுடை நெடுநகர்”, “பிறங்கு கிலைமாடத்து உறந்தை” உறங் தையில் ஒர் அறங்கூர் அவையுண்டு; அவ் அவையினர் அறம் பிறழ முறைவழங்கி அறியார்; அறங்கெழு கல்லவை உறந்தை', 'உறங்தை அவையத்து அறங்கெடல் அறி யாது', 'உறங்தை அவையத்து அறம் கின்று நிலையிற்று', இவ்வுறங்கை, சோழர்வழிவந்த சித்தன் என்பானுக்கு, ஒரு காலத்தில் உரிமையுடைத்தாய் இருந்தது; அப்போது, இது கொச்சி வேலிகளாலும், வெண்ணெல் வேலிகளாலும் சூழுண்டு. சிறப்புற்றிருந்தது; நொச்சிவேலித் தித்தன் உறந்தை', 'மாவண் தித்தன் வெண்ணெல்வ்ேலி உறந்தை.” . - - இவ்வாறு, அரசியற்றலைமையாலும், அறங்கூர் அவை யுடைமையாலும், வளத்தாலும், புலவர் பாராட்டும் கலக் தாலும், பெருமையுற்ற உறையூர், புலவர் பலரின் பிறப் பிடமாம் பெருமையினையும் உடையதாம். உறையூரின் உரிமை புடையோராய புலவர்கள் பதின்மருக்கு மேலாக g LaTrётватiг, இத்தகைய சிறப்பமைந்த உறையூரில் பிறந்தவர், இளம்பொன் வணிகனர். உறையூர் ஒரு பேராசின் தலை