பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வணிகரிற் புலவர்கள் நகராதலின், அது வாணிபத் துறையிலும் வளம்பெற். றிருந்தது. அந்நகர்வாழ் பல்வேறு வணிகர் குழுவினுள், பொன் வணிகர் குழுவும் ஒன்ரும். பொன், ஆடகம், சாம்பூருதம், கிளிச்சிறை, சாதரூபம் என மாற்று வகை யால் பலவாம். இவற்றுள், ஆடகமும், சாம்பூதமும் மாற்றுக் குறைதல் இல்லாப் பெருமைவாய்ந்தது. ஆதலின், அவற்றைப் பெரும்பொன் என்றும், கிளிச்சிறையும், சாத ரூபமும் மாற்றுக் குறைந்தனவாதலின், அவற்றை இளம் பொன் என்றும் பிரித்து வழங்கினர்: நம் புலவர், பின் னர்க் கூறப்பெற்ற இளம்பொன் வாணிகம் மேற்கொண்டு வாழ்ந்தமையால், இளம்பொன் வணிகனுர் என அழைக்கப் பெற்ருர் ஆண்டாலும், அறிவாலும் இறப்ப உயர்ந்த பெரியார்களின் இயற்பெயர்களே வழங்க மக்கள் அஞ்சுவ தும், அதனல் அவர் பெயரை வழங்காத, அவர்மேற் கொண்ட தொழிலால், இன்ன தொழிலார் என வழங் குவதும், நாட்டில் எங்கும், எக்காலத்திலும் உள்ள வழக்க மாம். உறையூரில் வாழ்ந்த இளம்பொன் வணிகர்களுள் இவர் மிகச் சிறந்திருந்தமையால், இவரை, அவர்கால மக்கள், இயற்பெயர்கொண்டு அழையாது, இளம்பொன் வணிகர் எனத் தொழிற் பெயரிட்டு இளம்பொன் வணிகர் என அழைத்தனர். ஒர்ஊரின் ஆனிரைகளே, அங்காட்டுப் பகையரசன் வீரர்களோ, அல்லது அவ்வூரை அடுத்த கிலங்களில் வாழ். எயினர், மறவர் போன்ற கொள்ளைக்காரர்களோ, அங் கிரைக்குக் காவலாய் அமைந்தாரை அடித்து விரட்டிவிட்டு ஒட்டிச் சென்று விடுவதும், அஃதறிந்து ஊரில்வாழ் வீரர்கள், விரைந்து பின்சென்று, அக்கொள்ளைக்கார்கள் வென்று, ஆனிரைகளை மீட்டுக் கொணர்தலும், அக்கால அன்ருட நிகழ்ச்சிகளாம். இத்தகைய போராட்டங்களில், மீட்கச் சென்ற வீரருட் சிலர், புண்பெற்று இறந்து போவதும், அவ்வாறு இறந்தாரின் பீடும், பெருமையும், பெயரும் பொறித்த கற்களே அவரைப் புதைத்த இடங் களின்மேல் கட்டு, மாலைசூட்டி வழிபடுவதும் வழக்கமாம்.