பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. காவிரிப்பூம் பட்டினத்துப் பொன்வாணிகனுர் மகனுர் நப்பூதனுர் " பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பின் புகார்’ என்று புலவர்களால் போற்றப்பெறும் பெருமைசால் நகரே காவிரிப்பூம் பட்டினமாம். காவிரி கடலோடு கலக்குமிடத்தில் அமைந்த மிகப் பழைய நகரம் இது; காவிரிப் படப்பைப் பட்டினம் எனச் சிலப்பதிகாரத் தில் அழைக்கப் பெறுகிறது ; காடுகொன்று நாடாக்கிக், குளங்கொட்டு வளம்பெருக்கி நாடாண்ட சோழர் பேராசகுன, கரிகாற்பெருவளத்தான் காலத்தில், சோழ அரசின், அரசிருக்கையாம் பெருமையுற்று விளங்கிற்று : சோழநாட்டின் வளம் செழிக்க, வாணிபம் பெருகப் புகார் போன்ற கடற்கரைப் பட்டினமே பெரிதும் பயனளிக்கும் என உணர்ந்த அவனுல், வளர்ந்த பெருநகரம் இது ; வணிகரும், வாணிபம் கருதிவரும் பிறநாட்டு மக்களும், தொழிலறி புலவர்களும், தொழிலாளர்களும் கூடிவாழும் கடலைச்சார்ந்த மருஆர்ப்பாக்கம், அரசரும், அமைச்சரும், அரசியல் துணையாளரும் வாழும் பட்டினப்பாக்கம் என்ற இருபெரும் பிரிவுகளாய் அமைந்த மாநகர்; இருபாக்கத் திற்கும் இடையே யமைத்த பெரியதோர் நாளங்காடியினை உட்ைபது; இக் நகரின் வாணிபவளமும் செல்வச் சிறப்பும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இருபெரும் இலக்கியங் களிலும், பட்டினப் பாலையிலும், புலவர்களால் போற்றி உரைக்கப்பட்டுள்ளன ; கற்புடை மகளிர் எழுவரைப் பயந்த பெருமைசால் நகர் புகார் எனக் கற்புடைத் தெய்வ மாம் கண்ணகியாரால் போற்றிப் புகழப்பெறும் பண். புடையது ; அறமும் அரசியலும் வழுவாது கிற்கத் துணை புரியும் ஐவகை மன்றங்களையுடையது; இவ்வாறு அரசியல் நெறியாலும், வாணிப முறையாலும் வளம்பெற்று விளங்கிய காவிரிப்பூம் பட்டினம், புலவர் பலர் வாழ்ந் தமையாலும் புகழ்பெற்றுத் திகழ்ந்தது ; புகார்ப் பெரு ககரில் பிறந்த புலவர்களாக, காவிரிப்பூம் பட்டினத்துக்