பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 வணிகரிற் புலவர்கள் அந்தணர் ஒம்பலும், துறவோர்க் கெதிர்தலும், தொல் லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் ஆய இல்லறம் நிகழ்த்துதற்கு வேண்டும் பொருளீட்டிவரும் கருத்தின குய்த் தலைமகன் பிரித்தானுக, அவன் பிரிவு பெருந்துயர் தருவதாயினும், அப் பிரிவு இல்லறம் நிகழ்தற்கு இன்றி யமையாததாம் எனக் கொண்டு, அவன் வருந்துணையும், அவன் பிரிவானுகும் தயர்பொறுத்துத் தலைவி ஆற்றி யிருத்தலாம். தலைவன் பிரிவன் என்று கூறிலும், அவன் பிரியான் என்று எண்ணுதலும், பிரிந்து சென்றக்கால், அவன் குறித்த பருவம் வந்தது; அவர் வங்கிலர் எனக் கூறி வருந்தும் தோழிக்கு, இஃது அவர் குறித்த பருவ மன்று ; அவர் கூறிய பருவத்தே தவருது வருவர்; கானம் கார் எனத் தோன்றிலும், யானே தேறேன்; அவர் பொய் வழங்கலர் எனக் கூறுதலும், வினைமுடித்த தலைமகன், விரைந்து வீடு செல்லவேண்டும் எனப் பாகனுக்குரைத் தலும், தலைவன் வரும்வரை தான் ஆற்றியிருந்த தன்மை யினைத் தலைமகள் பிறிதொருகாலத்தே கூறுதலும் அம் முல்லைத் திணைக் கூற்றுக்களாம். முல்லை நிலமாவது, காடும், அதைச் சார்ந்த கிலங்களு. மாம்; மாயோன் மேய காடுறை உலகம் என்பர் தொல் காப்பியனுர் ; பெரும் பொழுதினுட் கார்காலமும், சிறு பொழுதிலுள், அக்கார் காலத்து மாலையும் முல்லைக்குரிய காலமாம் என்ற கருத்துடையாய்க் " காரும் மாலேயும் முல்லை ’ என ஆசிரியர் கூறுதற்காம் காரணத்தை, * பிரிந்து மீளும் தலைவன் திறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுதலே முல்லைப் பொருளாயும், பிரிந்து போகின்ருன் திறங்கூறுவன வெல்லாம் பாலையாயும் வரு தலின், அம்முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும், தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார் காலமாம். என்ன ? வினை.வயிற் பிரிந்து மீள்வோன், விாைபரித்தேரூர்ந்து பாசறையினின்று மாலைக்காலத்து ஊர்வயின் விரூஉங் காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆகலின், அவை வெப்ப மும், தட்பமும் மிகாது இடைகிகர்த்தவாகி ஏவல் செய்து