பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரிப்பூம் பட்டினத்து ....... கப்பூதனர் 15 வரும் இளையர்க்கு நீரும் கிழலும் பயத்தலானும், ஆர்பதம் மிக்கு நீரும் கிழலும் பெறுதலின் களிசிறந்து மாவும், புள்ளும் துணையோடின் புற்று விளையாடுவன கண்டு தலை வற்கும் தலைவிக்கும் காமக்குறிப்பு மிகுதலானுமென்பது. புல்லே மேய்ந்து, கொல்லேற்ருேடே புனிற்றுக் கன்றை வினேந்து மன்றிற் புகுதாவும், தீங்குழலிசைப்பவும், பந்தர் முல்லை வந்து மணங்களுற்றவும் வருகின்ற தலைவற்கும், இருந்த தலைவிக்கும் காமக்குறிப்புச் சிறத்தலின், அக் காலத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று' என விளக்கும் ாச்சிஞர்க்கினியர் சொற்களால், அம்முல்லே சில இயல்பு ஒருவாறு விளங்குதல் காண்க. - கப்பூதனர் பாடிய இம்முல்லைப் பாட்டு, கணவன் வினே வயிற் பிரியக் கருதியதனே, அவன் செய்கையால் அறிந்து ஆற்ருது துயருறும் தலைவியது கிலேமையைக் கண்டு, தலைவன், தான் போதற்கு வேண்டும் காரணங்களே கிரலே எடுத்துக் காட்டவும், போக்கிற்கு உடன்படாது இருந்த வளைப் பெருமுது பெண்டிர், நாங்கள் கேட்ட நற் சொல் லால் தலைவன் விரைவில் வினே முடித்து வருதல் உறுதி ; வருக்தம் நீங்குவாயாக’ எனக்கூற, அவ்வறிவுரை கேட்டவள், தலைவன் அவ்வாறு செல்வது அறவழிப் பட்டதே என்பதை எண்ணி, ஆற்றி யிருந்தாளாக, தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற காலத்தே வந்ததனேக் கண்ட வாயில்கள் வாழ்த்திக் கூறும் துறையமைந்து வர். தளது. - தலைவியோடு துயில்கொள்ளும் தலைமகன், வினேமேற் செல்லுதற்காம் செயல்களே முடித்தற் பொருட்டு, அவள் அறியாமல் எழுந்து சென்றுவிட்டான்; உறக்கம் கலைக் தெழுந்த தலைமகள், தன்னேடு துயின்றிருந்தானேக் காணு :ளாய், அவன்பால் சின்னுட்களாகக் காணப்படும் இது -போன்ற செயல்களையும் எண்ணி, அவ்வெண்ணத்தால் உடல்மெலியக் கழலும் தன் வளைகளைக் கழலாவாறு செலுத்தியும், மயக்கம் கொண்டும், பெருமூச்சுவிட்டும், அம்பேறுண்ட மயிலேபோல் நடுங்கியும், தன் அணிகலங்