பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வணிகரிற் புலவர்கள் கொள்ளுமிடத்தைச் சூழ்ந்து திரியவும், மணியொலி அடங் கிய இரவின் நடுயாமத்திலும், போர்மேற் சென்ற வேட்கை யால் உறக்கம் ஒழிந்திருந்து, மற்றை நாட்காலையில் வாள் கொண்டு போராற்றி வெற்றிபெற்று, பகைவர் நாடுகளைக் கைப்பற்றிய வெற்றிச் சிறப்பாலே, எக்காலமும் வென்று எடுக்கின்ற கொடியை எடுத்து, காடு பிற்பட்டுக் கழிய, காயா மலாவும், கொன்றை பொன் போல் பூக்கவும், காங் தள் கைபோல் விரியவும், தோன்றி பூக்கவும், கலையொடு கூடிய மான் தள்ளவும், காடு தழைத்த பெருவழியில், வெற்றிதோன்றக் கொம்பும் சங்கும் முழங்க, பெரும்படை யுடனே, விரைந்து செல்லும் தன் குதிரைகளே, அவ்விரை வால் மனம் அமையாது மேலும் விரைவாகச் செலுத்தும் எண்ணமுடையவராய் வந்த தலைமகன் தேரிற்பூண்ட குதிரைகள் ஆரவாரித்தன. - . . . இது, கப்பூதனர் பாடிய முல்லைப் பாட்டின் பருப் பொருள். இம்முல்லைப் பாட்டினுள், கையிற் சங்கும் சக்கா மும் கொண்டு, மார்பில் கிருமகள் வீற்றிருக்க விளங்கும் திருமால், மாவலி, மூன்றடி மண்ணைத் தாரைவார்த்துக் கொடுக்க, வளர்ந்து கொண்ட பேருருவம் நன்கு படமாக் கப் பட்டுளது : - 'ானந்தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல்.’ (முல்லைப் : க.க.) கன்றுகள், காலையில் காடுநோக்கிச்சென்ற தாய்ப்பசுக்கள், மாலையில் மீண்டு வாராமையுணர்ந்து வாடியக்கால், அக் கன்றுகளிலும், மிக்க வருத்தம் கொள்ளும் ஆய்மகள், அடிக்கும் குளிர்காற்றினையும் பொருட்படுத்தாது, அக் குளிர் நீங்குமாறு இரு கைகளாலும் தோளை இறுகப் பிடித்துக்கொண்டு, அக்கன்றுகளுக்கு ஆறுதல் கூறுவாள் போல், தும் தாயர் இப்போதே வருவர் என்று கூறி, அப் பசுக்களின்யின் கோலேக்தி வரும் தன் கணவன் வருகை காலில் கட்டிய சிறகயிற்றல் பிணிப்புண்டு கிற்கும்