பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வணிகரிற் புலவர்கள் - குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி அசையா நாற்றம் அசைவளி பகாத் துறுகல் கண்ணிய கறியிவர் படப்பைக் குறியிறைக் குரம்பைசம் மனை வயிற் புகுதரும் மெய்ம்மலி உவகையன் ; அக்கிலே கண்டு முருகென உணர்ந்து முகமன் கூறி உருவச் செந்தினை நீரொடு து உய் நெடுவே ட் பாவும் அன்னை ; அன்னே - - என்னுவது கொல் தானே.” (அகம்:உஎஉ.) கோழி ஒருநாள் நான் தெருவில் கின்றுகொண் டிருந்தேன் ; அப்போது, நம் தலைவற்குப் புதுப்புதுப் பெண்களே உறவாக்கி வைப்பதே தொழிலாகக் கொண்ட பாணன், அவ்வழியே வந்து கொண்டிருந்தான்; திடீரென ஒரு கொல்லேறு அவனைத் தாக்கிற்று; அதுகண்டு. அஞ்சிய அவன், தன் கையில் உள்ள யாழையும் ஆங்கேயே போட்டுவிட்டு விாைய வந்து நம் வீட்டினுட் புகுந்து, கொண்டான் ; அவனுக்கு நேர்ந்தது கண்டு மகிழ்ந்த யான், அம்மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு அவன் முன்சென்று ‘ஐய! உங்கள் வீடு இது அல்ல; அது என்று கூறினே கை, அஞ்சிய அவன், மெய்ம்மறந்து, தன்னையும் என்னே யும் மாறிமாறிப் பார்த்துத் தொழுது கின்ருன் , அந்தக் காட்சியை கினேந்து கொண்டால் நகையுண்டாகிறது ” எனத் தலைமகள் ஒருத்தி உரைத்தாள் என அவர் கூறு வதும் நன்கச்சுவை பயந்து கிற்றல் காண்க :

  • நகையாகின்றே தோழி! செருகல்..... ------- ஊரன் திண்தார் அகலம்" - வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன், தெருவில் புனிற்குப் பாய்ந்தெனக் கலங்கி, ய்ாழ்இட்டு எம்மனைப் புகுதந்தோனே ; அதுகண்டு மெய்ம்மலி உவகை மறையினென், எதிர்சென்று இம்மனை அன்று ; அஃது, உம்மனை ; என்ற என்னும் தன்னும் நோக்கி, - மம்மர் நெஞ்சினேன் தொழுது கின்றதுவே ?

(அகம் : திசு.)