பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனுர் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்ருகிய கெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தோன்றத் துணை புரிந்தவரும், மணிமேகலை துறவினேத் தோற்றுவித்தவருமாய புலவர், மதுரைக் கூலவாணிகன் சித்தலைச் சாத்தனாவர். சீத் தலைச் சாத்தனர், கடைச்சங்கப்புலவர்களுள், நக்கீசர், கபிலர், பரணர் போன்ற பெரும் புலவர்க்ளோடு ஒருங்கு வைத்து எண்ணத்தக்க உயர்பெரும் புலமையுடையவ ாவர். இவர் பெயர் சாத்தனர் எனவும், சித்தலைச் சாத்தனர் எனவும், கூலவாணிகன் சாத்தனர் எனவும், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் எனவும் வழங்கப்பெறும். - சீத்தலை என்பது, செந்தலே, கழாத்தலை வடதலை, குழித்தலே என்பனபோல, ஒர் ஊர். சீத்தலே என்ற பெயருடையதோர் ஊர், மலைநாட்டில் உளது ; அவ்வூரில் உள்ள ஐயனுரை, அக்காட்டு மக்கள் சாத்தனர் என்றே இன்றும் அழைப்பர்; இவரும் அவ்வூரினாாதலின், சீத்தலைச் சாத்தனர் எனப் பெயரிடப்பட்டனர் என்பர் சிலர். சிலர் இவர் பிறந்த சீத்தலை, திருச்சி மாவட்டத்தில், பெருமளூர் வட்டத்தில் உள்ள சீத்தலையே; பெருஞ் சாத்தனர். ப்ேரி சாத்தனர் என்ற புலவர்களின் வேறு பிரித்து அறிதற். பொருட்டு இவர் சீத்தலைச் சாத்தனர் எனப்பட்டார் என்ப்ர். இவர், சீத்தலையில் பிறந்து, சிாத்தனர். எனப் பெயரிடப்பெற்று வாழ்ந்து, மதுரை போந்து, ஆங்கே, நெல்லரிசி, புல்லரிசி, வரகு, கினே, சாமை, சோளம், தோரை, மூங்கில் நெல் முதலாய எண்வகைக் கூலங்களே விற்கும் வாணிபத் தொழில் மேற்கொண்டு வாழ்ந்தமை பால், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனுர் என அழைக்கப்பட்டார். இனி, புலவர் சுட்டியிருக்கும் தமிழ்ச் சங்கத்தில் அரங் கேற்றுவித்தற் பொருட்டு வரும் நூல்களில் பிழைகள்