பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுமைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் 85 துயர்கண்ட அவள் தோழி, தோழி! தலைவர் நின்மாட்டு கிறையருளுடையவர் ; ஆதலின் கில்லாது வருவர் ; வருக்தாது வாழ்க,” என்று கூறி ஆற்றுவிக்கலாயினள். அவ்வாறு கூறும் தோழியைப் பார்த்து, ' தோழி ! இயலுவதை இயலும் எனக் கூறி ஈதலும், இயலாத தொன்றை, அது இயலாது எனக் கூறி மறுத்துவிடலும் ஆண்மையும் அருளும் உடையார் செயலாம் ; இயலாத தொன்றை இயலும எனக் கூறி ஏமாற்றலும், இயலுவதை இயலாது எனக்கூறி மறுத்தலும் இரப்போர்க்கும் துன்பம் தரும் ; அவர் புகழையும் கெடுக்கும் என்ப; இதை யறிந் தவர் நம் தலைவர்; தம்பால் வந்து பொருள் இல்லேன் ’ என்று கூறி இரத்து நிற்பார்க்குத் தம்மால் இயலுவதை இயலாது எனக்கூறி மறுப்பதை ஏற்காத உள்ளமுடையவர் நம் தலைவர்; ஆதலின் அவர் பொருள்சேர்த்தல் கருதிப் பிரிந்து சென்று ளார்; இதனுல் நம் தலைவர்க்கு நம்மைக் காட்டினும் பொருளின் மீதே மிகுதியும் காதல் உண்டு ; இது உண்மையாகவும், ,ே காதலர்க்கு கம்பால் அன்பு கொண்டிருப்பதிலேயே மிகுதியும் காதலாம் என்று கூறுகின்றன ’ என்று, அவள் கூறுவன கேட்டும் துயர் திராதாள்போல் கூறி, "கோழி! அவர் பிரிந்துசென்றது பொருள்கருதி ; அப்பொருள் உண்டானுல்தான் அவர் புகழோடு வாழுதல் இயலும் அவர் அவ்வாறு புகழ் கொண்டு வாழ்வதை விரும்புவதே என்கோக்கம்; ஆதலின், அவர் பொருள்மேல் காதலராதலை யானும் விரும்பு கின்றேன்; அதனல், என்பால் காதல் குறைவதையும் யான் பொருட்படுத்தேன்; உண்மை இவ்வாருகவும், என்னே ஆற்றுவதற்காக, அவர்க்கு கின்னிடத்திலேயே காதல் உண்டு’ என ஏன் பொய் கூறுகின்றன” என்று தன் உள்ளத்தின் உண்மைநிலையினே உணர்த்தினுள். பெண்ணினம் கொள்ளவேண்டிய உள்ளமும், அவர் பெற்றிருக்க வேண்டிய அறிவும் இவையென விளக்கும் எண்ணமுடையராய் மேற்கூறிய கூற்றமைந்த செய்யுளைப் பாடியுள்ளார் சாத்தனர் :