பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 . வணிகரிற் புலவர்கள் இல்லோர்க்கு இல்என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும், பொருளே காதலர் காதல் : அருளே காதலர் என்றி நீயே ' (அகம் : டுக..), "கிழவி கிலேயே வினேயிடத்த உரையார் ; வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்” என்ப; வினைமுடித்து கின்ற தலைமகன், தான் குறித்துவத்த பருவம் வந்து விட்டது ; தன் வருகை காணுது வருக்திவாள் தலைவி என்றெல்லாம் எண்ணி விரைந்து வீடுசெல்ல விரும்புவன்; அத்தகைய ஆர்வத்தால் துடிக்கும் தலைவன், உள்ளம் போல் உற்றழி உதவும் குதிரைகள் உடையணுகவும், தலைவியைக் காணவேண்டும் என்ற உள்ளத்துடிப்பால், இயல்பாகவே விரைந்து செல்லும் தன் குதிரையினை மேலும் விரைந்த ஒட்ட விரும்புவான்; அதனல், அவன் திண்டா வைமுள் தீண்டவும் அஞ்சான். அத்துணை விசை வோடு வீடுசெல்லும் போதும் அவன் உள்ளம் அறக்கழி வுடையன செய்யத் துணியாது; அருள் அல்லன செய் யான் அவன் ; அத்தகைய பண்பட்ட பெருந்தகையாவன் தமிழ்நாட்டுத் தலைமகன். . . இத்தகைய தலைவன் ஒருவனின் உயரிய உள்ளத்தைப் புலவர் சாத்தனர் நன்கு உணர்ந்து பாராட்டியுள்ளார். ஒருதலைவன், தன்வினே முடித்துக்கொண்டு விர்ைந்து வீடு நோக்கி வருகின் முன் இடைவழியில், ஆண்மான் ஒன் றும், பெண்மான் ஒன்றும் கலந்து களித்து உலாவுவதைக் கண்டான்; இத்தகைய காட்சிகள், அவன் உள்ளத்தில் காதல் கினை வினே எழுப்பி, மேலும் விரைவாகத் துண்டும்; ஆனல், இத்தலைவன் உள்ளம் பண்பட்ட உள்ளம்; ஆத லின் அவ்வுள்ளம் வேறு ஒன்றை எண்ணலாயிற்று ; விரைந்துசெல்லும் தேரின் ஒலியும், அத்தேரை விரைந்து இழுத்தோடும் குதிரைகள் எழுப்பும் ஒலியும், ஒன்று கூடி வாழும் அம்மானினத்தின் காதில் விழின், அவை, அஞ்சி ஒடும்; அவை அவ்வாறு இடிவிடின் அவற்றின் கூட்டுறவு அறும்; இந்த எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்தது;