பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வணிகரிற் புலவர்கள் உற்ற இன்பதுன்பங்களை உணரும் ஆற்றலை உடையதாக உளது; அதே உடல், உயிர் தன்னை விட்டுப் பிரிந்தவுடனே, அவ்வாறு இன்ப, துன்பங்களே அறியும் ஆற்றலை இழந்து விடுகிறது; அதனல், இன்ப, துன்பங்களே அறியும் ஒரு பொருள் அவ்வுடலைவிட்டு ஒடிவிட்டது என்பது உண்மை யாம்; ஒடினர் தமக்கு ஒர் உறைவிடம் உண்டு; ஒடிய ஒரு பொருள் ஒடிக்கொண்டேயிராது; எங்கேனும் ஒரிடத்தே கின்றே ஆகல் வேண்டும் என்பதை எவரும் மறுக்கார்; அதைப்போலவே, உடலைவிட்டுப் பிரிந்த உயிர், தான் செய்த வினைக்கீடான ஒர் உடலில் புகுந்து உறையும் எனக் காரண காரியங்களைக் காட்டி விளக்கும் முறை, அவர் பொருளுணர்த்து முறையினைக் காட்டி கிற்கும்: "உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி: மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடில், தடிந்து எரியூட்டினும் தான்உணராது; எனின் உடம்பின்டப் போனது ஒன்று உண்டு எனஉணர்;ே போனர் தமக்கோர் புக்கில் உண்டு என்பது யானே அல்லேன் யாவரும் உணர்குவர்; உடம்பு ஈண்டு ஒழிய, உயிர் பலகாவதம் கடந்து சேட்சேறல் கனவினும் காண்குவை; ஆங்கனம் போகி, அவ்வுயிர், செய்வின்ை பூண்ட யாக்கையிற் புகுவது தெளிகீ (மணி. கசு : கசு-கoஇ) மணிமேகலை நாலை எப்பக்கம் நோக்கினும் அப்பக்கம் ஒர் அரிய அறவுரையினே உரைப்பதாகவே தோன்றும்; அரசர்க்குக் கூறும் அறவுரையும் உண்டு; ஆண்டிகட்கு உரைக்கும் அறவுரையும் உண்டு ; இாப்போர்க்கு ஈந்து அறஞ்செய்வோர்க்கும் அறமுரைக்கும்; சுருங்க உரைக் கின், ஏடெடுத்தார் ஒவ்வொருவரும், தமக்கு வேண்டும் அறிவுரை ஒன்ருே பலவோ இருப்பக் கண்டு மகிழ்வர். 'கோல்நிலை கிரிந்திடின், கோள்கிலே திரியும் . கோள்கிலை கிரிந்திடின், மாளிவறங் கூரும் ; மாரி வறங் கூரின், மன்னுயி ரில்லை ; மன்னுயி ரெல்லாம் மண்ணுள் வேந்தன் தன் உயிர்.’ (மணி, எ: அ-கஉ) இஃது அரசர்க்குணர்த்திய அறவுரை.