பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் 41 ' தவத்துறை மாக்கள், மிகப்பெரும் செல்வர், ஈற்றிளம் பெண்டிர், ஆற்ருப் பாலகர், முதியோர் என்னன், இளையோர் என்னுன் கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும், - கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் - மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ? (மணி. சு: கன-கoச) கிலேயாமையினையும், அதை உணரா மக்களின் மடமை 9னேயும் எத்துணைத் தெளிவாக எடுத்துக்காட்டி எவ்வளவு கடுமையாகக் கண்டித்துள்ளார் ! உலக அறிஞர் எவரும் கூருத ஒர் உண்மையினைச் சாத்தனர் கூறுகின்ருர்; உலகிற்கு உயிர் அளித்து நிற்பது, இரத்தலும், ஈதலுமாகிய தொழில் நடைபெறுதலே ஆம் என்பர்; அத்தொழில் கிகழும் உலகினைப் பாராட்டுவதும், அத்தொழில் நடைபெரு விண்ணுலகினேப் பழிப்பதும் வழக்கமாம். உலகிற்குப் பெருமைதரும், இரத்தலும் ஈதலும், உலகம் வறுமையுற்ற காலத்தில்தான் கிகழும் ; உலகமெல்லாம் வளம் கிறைத்து விடின் அவ்விரு தொழி லும் இடம்பெரு; அவ்விருதொழிலும் இல்லா உலகில் வாழும் மக்கள், இாக்க உள்ளம் அற்று, அரக்காவர். இதல்ை உலகம் அனைத்தும் செல்வத்தில் செழிப்பதுகாணச் சாத்தனர் அஞ்சுகின்ருர்; அதனுல் உலகம், அறவுணர்வு இழந்து மறவுணர்வு பெற்று விடுமோ என்ற அச்சம் அவரைப் பிடித்து ஆட்டுகிறது. பாண்டிகாடு வளம்பெற்று வாழ்ந்த காலத்தில், அக்காட்டில் வாழ்வோர், பசிகோய் அறியாாாயினர்; அதனல், இரப்போர் ஒலிகேட்ட ஊர் அம்பலத்தே, காமுகரும், பாத்தையர் பின்செல்வோரும், எவரையும் இகழ்ந்துரைப்போரும், கூடிஇருந்து வட்டும் குதும் ஆடி, வீணிற் காலங்கழித்து வாழ்விழப்பர் எனக் கூறி வருக்குகின்ருர், அறம் ஒங்க, ஒரளவு வறுமையும் வளரவேண்டும் என்ற சாத்தளுரின் உள்ளத்தை உணர் வோமாக! - - ‘. . . . . . . . . . . . . . . . . . . .