பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வணிகரிற புலவர்கள் 'வசித்தொழில் உதவ, மாநிலம் கொழுப்ப, பசிப்பு:உயிர் அறியாப்பான்மைத்து ஆசலின் ஆருயிர் ஒம்புகன் அம்பலப் பீடிகை, ஊண்ஒலி அரவம் ஒடுக்கிய தாகி, விடரும், தளர்த்தரும, விட்டேற் முளரும், கடவை மாக்களும் கையொடு வைகி வட்டும், சூதும், வம்பக் கோட்டியும் முட்டா வாழ்க்கை முறைமைய தாக.' (மணி கச : நிஎ-சுச} சாத்தனர்.பால் புலமையோடு, பல அருங்குணங்களும் அமைந்திருக்கக் காண்கிருேம்; சாத்தனர் தமமையொத்த புலவர்களைப் போற்றுவதில் பெருமையுடையவராவர் ; சிலப்பதிகாரம் என்ற பெயரால் நாட்டுதும் பாமோர் பாட்டுடைச் செய்யுள் என்ற இளங்கோவடிகளிடம், * அடிகள் நீரே அருளுக” என்று கூறிய செயல், அவர் பிறபுலவர்களைத் தம்மினும் உயர்ந்தோாாகக் கொண்டு போற்றுவதை விளக்கி சிற்றல் காண்க. ஏறக்குறையத் தம் காலத்தே வாழ்ந்தவராய திருவள்ளுவரின் பெருமை னேயும், அவர் குறளின் அருமையினையும், தாம் பாடிய மணிமேகலையினிடையே வைத்துப் பாராட்டியுள்ளார்: " தெய்வம் தொழாஅள் கொழுநற் குெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை டென்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை தேருய் ? . - (மணி. உஉ : இக-சுச) இந்த அடிகளில் வள்ளுவர் இயற்றிய குறளே எடுத்தாண்ட தோடு அவரைப் பொய்யில் புலவன் ' என்றும், அவர் கூறிய குறட்கருத்தினேப் 'பொருளுரை” என்றும் போற்றியுள்ளமை உணர்க. உலகில் பல்வேறு கடவுட் கொள்கையினர் வாழினும், அவர்கள் ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்ளாமல், தங்கள், தங்கள் கொள்கைகளை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். சமய உணர்வால் பெளத்தாய சாத்தனர்,