பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் 48. தம்முடைய மணிமேகலையில், துதல்விழி நாட்டத்து இறைவன் முதலாம் பிறசமயக் கடவுளர்களையும் எடுத்துக் கூறிப் பாராட்டியதோடு, மக்கள் தம் பகைவரோடும் பகை. கொள்ளுதல் கூடாது. “பற்ரு மாக்கள் தம்முடனுயினும், செற்றமும் கலாமும் செய்யா தகலுமின்’ என்றும் கூறிய அவர் அறிவுரையினைக் காணுங்கள். ஒழுக்கம் விழுப்பம் தரும்; ஆகவே, அதை உயிரினும் ஒம்புதல்வேண்டும் ; அவ்வொழுக்கத்தில் தவறிய மக்கள், தலையின் இழிந்த மயிரே போல் மதிக்கப்படார். வழுக்கிய ஒழுக்கத்தினர், தம் மக்களே யாயிலும், ஒதுக்கித் தள்ளு தல் வேண்டும். இன்த அரிய கொள்கையினை ஆசிரியர் சாத்தனர் மேற்கொண்டிருந்தார் என்பதை அவர் நால் வழி அறிகின்ருேம். உதயகுமரன், மணிமேகலைபால் சென்ற உள்ள முடையணுய், அம்பலம் புகுந்து, ஆங்கே காஞ்சனல்ை வெட்டுண்டு இறந்தான் ; அரசிளங் குமரன் கொல்லப்பட். பட்டான் என்ற செய்தியை அரசன்பால் சென்றுரைத் தனர் , அரசன், தன் மகன் இறந்த செய்திகேட்டு அழு தான் அாறறினுன் , அவன் கொலைக்குக் காரணமாயிருக் தாரைக் கொணர்ந்து கொல்க என்று கூறினுன் எனப் பாடினால்லர் சாத்தனர்; கன்றின் மீது தேர் ஒட்டினன் என்று தன் மகனேயே கொன்று அறம் சிற்க வாழ்ந்த அரசன் வழியில், தன்பால் அன்பு செலுத்தா ஒருத்தியின் பின்சென்று கொலையுண்ட கொடியவன் ஒருவனும் இருக் கான் என்றசெய்தி, என்னேயொத்த பேரரசர்கட்குக் தெரியு முன்னரே, இவனக் கொளுத்திச் சாம்பலாக்குக என்று கூறினன் என்று பாடிய சாத்தனர் உள்ளத்தை என்னென்பது ! - மகனே முறைசெய்த மன்னவன் வழி, ஒர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம் சங்கிவன் தன்னையும் ஈமத்து ஏற்றுக’ (மணி. உஉ : உச0-க).