பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. வடம வண்ணக்கன் தமிழ்காட்டில், மிகப் பழையகாலத்திலேயே, பண்ட மாற்றுமுறை மாறிப் பொன்னிற்கும் வெள்ளிக்கும் பொருள்களை விற்பதும் வாங்குவதுமாய முறை இடம் பெற்றுவிட்டது; தமிழர்கள், பிறநாடுகளோடு வாணிபம் மேற்கொண்டதால், இம்முறையினே மேற்கொள்ளவேண் டியவராயினர். வெளிநாட்டுக் கப்பல்கள், தமிழ்நாட்டிற்குப் பொன்னெடுவந்து கதியொடு பெயரும் என்று நூல்கள் கூறுகின்றன. பொருள்களேப் பொன்னுக்கு மாற்றும் முறை இடம்பெற்று விட்டமையால், சிறிதும், பெரிதுமாய நாணயங்களே அன்றைய ஆட்சியாளர் நாட்டில் நடமாட விட்டிருந்தனர். பொன், மாற்றுமிகுதி, குறைவிற்கேற்ப, ஆடகம், கிளிச்சிதை, சாம்பூதம், சாதரூபம் எனப்பல் வேறு வகைகளாகப் பிசிக்கப்பட்டிருந்தது. அதனல், நாணயங்கள் எர்தப் பொன்னுல் ஆக்கப்பட்டுள்ளன என் பதை ஆராய்ந்து பார்க்கவேண்டியது இன்றியமையாததாகி விட்டது; அதனுல், அத்தகைய ஏாணய ஆய்வாளர்கள் காட்டில் ஊர்தோறும் ஒருவரோ, பலரோ வாழலாயினர்; அத்தகைய நாணய ஆய்வாளர்கள், வண்ணக்கர் என அழைக்கப்படலாயினர். அவ் வண்ணக்கரில் பெரும்பா லோர், வடகாட்டினின்றும் போக்த வடம வகுப்பினராவர். ஆதலின், அதைக்குறிப்பிடும் வடம என்ற சொல்லையும் அவர் பெயர்முன் இணைத்து வழங்கலாயினர். வடநாட்டி லிருந்து வந்து நாணய ஆய்வுத்தொழில் மேற்கொண்டு வாழ்ந்த அவர்கள், வந்துவாழும் நாட்டின் மொழியாகிய தமிழ்மொழியினேக் கற்றுக் கவிபாடும் ஆற்றலுடையராயி னர். எட்டுத்தொகை. தால்களைப் பாடிய புலவர்களுள் எழுவர், இவ் வண்ணக்கர் மரபினராவர். அவ் வண்ணக்கர் எழுவருள், நால்வர் வடகாட்டினின்றும் வர்தவராகவும், ஏன்ய மூவர் தமிழ்நாட்டில் பிறந்து, அவ் வடமர்வழியாக அத்தொழில் அதித்தவராகவும் காணப்படுகின்றனர். அவ் வாறு வந்த வடமவண்ணக்கர்களுள், இயற்பெயர் குறிக்கப்