பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடம வண்ணக்கன் 63 பெருமல், வடம வண்ணக்கன் எனச் சிறப்புவகையால் அழைக்கப் பெறுபவர் நம் புலவராவர். இவர் பாடிய, குறிஞ்சித்தினைப் பொருள்கொண்ட செய்யுளொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது. நெய்தல் கிலத்துக் கடலையும், அக் கடலின் கரைக்கண் விளங்கும் கானலையும் ஒருசேரச் சிறப்பித்துக்கூற வந்த புலவர், அக் கடலும், கானலும், கிலவும், இருளும்போல் தோன்றும் என்று கூறிய உவமை மிகவும் சிறந்து விளங்கு கின்றது. ஆழம் மிகுதியால் கருமைநிறம் பெற்ற கடல் இருள்போலவும், கடலைச் சார்ந்த கானலில் பரந்துகிடக்கும் மணல் தூய்மையால் வெண்ணிறம்பெற்று நிலவு போலவும் தோன்றும் என்ருவது, அலைமடங்கி வெண்ணிறம் பெதும் கடல் கிலவுபோலவும், மரம் செறிந்து விளங்கும் காணற் சோலைகள் கருகிறம் பெறுவதால் அது இருள் போலவும் தோன்றும் என்ருவது பொருள்தரும் நிலையில் பாடிய அவர் புலமையினேக் காணுங்கள் : - நிலவும், இருளும் போலப் புலவுத்திாைக் கடலும், கானலும் தோன்றும். (குறுக்: அக)