பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வணிகரிற் புலவர்கள் உரிமை உடையளாய தலைவி இருப்பவும் அவளே மறந்து அன்பும், கற்பும் அறியாப் பரத்தையரைக் காதலித்து வாழும் வழுக்கிய_வாழ்க்கையினன் ” என்று தலைவனின் தவறிய ஒழுக்கத்தின எடுத்துக்காட்டி இடித்துரைத்தாள். தோழி, தலைவனே, அவன் பாணன் முன் இத்துணை வெளிப்படையாகப் பழி கூறுதல், பழங்கால மகளிர் பண் பன்று. ஆதலின், தோழி தலைவனப் பழித்துக் கூறுங்கால், தலைவன், ஊருள் வாழும் ஆண் குருவியொன்று, கருவுற் றிருக்கும் தன் பெண்குருவி, முட்டை யிடுதற்கு ஏற்ற இடத்தைத் தேடிச் சென்று, தேனடை கட்டித் தொங்கும் இனிய கரும்பு விளைந்திருக்கும் கழனிக்குச் சென்று, அத் தேனடையினே க் காணுது, மணம் நாறுதல் இல்லா அக் கரும்பின் வெண்ணிறப் பூவைக் கோதிக்கொண்டுவரும் வளம்மிக்க ஊரினன் ஆவன் என்று வெளிப்படக் கூறி, அவன் நாட்டுவளத்தைப் புகழ்வாள்போல், ஆண் குருவி, கழனியில் தேனடையும் தீங்கரும்பும் உளவாகவும், மணமோ, கண்கவர்கிறமோ இல்லாத கரும்பின் பூவினைக் கொழுதுவதேபோல், உங்கள் தலைவனும் அன்பும், கற்பும் கிறைந்த தலைமகள் ஈண்டிருப்பவும், அப் பண்பு இல்லாப் பரத்தையரை நாடிச் செல்வன் எனப் பழிகூறினுள் எனப் பாடிய புலவன் புலமையினே மகிழ்ந்து பாராட்டாதார் யார் ? "யாரிலும் இனியன் பேரன் பின்னே; உள்ளூர்க் குரீஇத் தள்ளுசுடைச் சேவல் சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர், தேம்பொதிக் கொண்ட தீங்க்ழைக் கரும்பின், காரு வெண்பூக் கொழுதும் - யாணர் ஊரன் பாணன் வாயே. (குறுங் : அடு) - இச் செய்யுளில், வரும், " உள்ளுர்க் குரீஇ...பாணர் ஊரன்' என்ற தொடரில் அமைந்திருக்கும், சொல்லழ கும் பொருளழகும், உள்ளுறைச் சிறப்பும் கண்டு வியந்த இனிவாசகப் பெருந்தகையாரும், சோமான் பெருமாளும்,