பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தன் பிட்டங் கொற்றனைப் பாடிய தாமோ கானரைப். போன்றே இவரும், வடகாட்டினின்றும், தமிழகத்தில் வந்து வாழ்ந்து, நாணய ஆய்வாளர் தொழில் மேற்கொண் டிருந்த புலவராவர். இவர் மலேயமான் திருமுடிக்காரியின் கொற்றமும் கொடையும் ஒருங்கே தோன்ற ஒரு செய்யுள் பாடியுளளாா. . தமிழகத்தைச் சோ சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர் வழிவந்தோர் ஆண்டிருந்த அக்காலத்திலேயே, அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும், அதியர், ஆவியர், மலையர், வேளிர் போன்ற வேறு இன அரசர்களும் ஆண்டு வந்துள்ளனர். மூவேந்தர்கள், குறிப்பிட்ட எல்லைக்குட். பட்ட நாட்டை ஆண்டு வந்தது போன்றே, இக்குறுகில மன்னர்களும், தங்கள் ஆட்சிக்குரிய நிலமாக, ஒரு எல்லைக் குட்பட்ட நாட்டினேப் பெற்று ஆண்டிருந்தனர். அத்த கைய அரச இனங்களுள் ஒருவராகிய மலையர் அல்லது மலையமான்கள் என்பவர், தென்ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளதும், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டது. மான நாட்டை ஆண்டு வந்தனர். மலாடு, மலையமானுடு என்ற பெயர் பெற்றிருந்த அங்காடு, காடும் மலைகளும் சூழ நடு நாட்டில் இருப்பதால், கடலாலோ, பகைவர் கிளாலோ அழிவுறும் என்ற அச்சம் அற்றிருந்தது; அங் நாட்டிடையே, முள்ளுர் என்ற அழகிய பயன் மிக்க மலை யொன்றும் இருந்தது. அந்நாடாண்ட மலேய மன்னர் களுள், திருமுடிக்காரி சிறந்தவனுவன் ; வள்ளல் எழுவ: ருள் ஒருவன் என்ற புகழிற்குரியவன்; தன்னைப் பாடி வரும் பாணர், கூத்தர், புலவர் முதலிய இாவல்ர்க்குக் களிறும், தேரும் கொடுத்துச் சிறப்புச் செய்தவன் ; பேராற்றல் மிக்கவன்; தன் முள்ளுர் மலையினைக் கைப் பற்றப் பெரும் படையுடன் வந்த ஆரிய அரசர்களே அலறத் தாக்கித் துரத்தின வன்; கொல்லி மலையாண்ட, வில் லாண்மை மிக்க வல்வில் ஒரியைக் கொன்று, அக்கொல்லி