பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன. வடம வண்ணக்கன் பேரி சாத்தன் வடம வண்ணக்கன் பேரி சாத்தனர் பாடிய பாக்கள், அகநானூறு, புறநானூறு ஆகிய இரு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன ; புறத்தில் அவர் ப்ாண்டியன் இலவந்தி கைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனைப் பாடியுள்ளார். இல வந்திகையாவது, வேண்டுமளவு நீரை சிறைக்கவும், போக்க வும் வல்ல பொறிகள் அமைந்த வாவியைச்சூழ உள்ள வயந்தச்சோலை; அரசனும், அவன் மனைவியும் இருந்து மகிழ்தற்காம் காவல் கிறைந்தது. ' பன்மலர் அடுக்கியி நன் மாப்பந்தர் இலவந்திகை” என்றும், நிறைக்குறின் கிறைத்துப் போக்குறின் போக்கும், பொறிப்படை யமைந்த பொங்கில வங் திகை” என்றும் புலவர்களால் புகழப்பெறுவது. இத்தகைய சோலையில் உயிர்விட்டமை யால் நன்மாறன், இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன் மாறன் எனப் பெற்ருன். - இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், மக்கள் பலரும் மனேவியும் உடன்வாழ வாழ்ந்தோளுவன்; கிறைந்த செல்வமும் டிேய வாழ்நாளும் பெற்றவன் ; ஆயினும், தன் பால் வந்து பாராட்டிய புலவர்க்கு, அவர்கள் வேண்டும் போதே அளிக்கும் அருட்குணம் அமையப் பெருதவ வைன்; அவன்பால் காணப்பெறும் இக்குறை கண்டு இடித்துரைத்த புலவர் பலருள், வடம வண்ணக்கண் பேரி சாத்தனரும் ஒருவராவர். நன்மாறன் மனைவியார், தெய் வக் கற்புடையார் என அவன் மனைவியையும், அவன் மக்கள், பவழம் போன்று சிவந்த வாயினேயும், கிண்கிணி அணிந்த காலினேயும் உடைய அழகர் ; தமிழ்நாட்டில் வாழ்ந்த பேரரசர், குறுகில மன்னர் அனைவரையும் வென்று அவர்பால் கைக்கொண்ட பெரும்பொருள் கொண்டு வந்து சேர்க்கும் கொற்றம் உடையவர் என அவன் மக்களை யும் பாராட்டிய புலவர். அவன், தன்னைப் பாடிவரும் புலவர்க்குப் பரிசில் அளிக்காது வாழ்வதை வெறுத்து வெகுண்டு, அவன் மக்களும் அவனைப்போல் பரிசில்