பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வணிகரிற் புலவர்கள் காது அகல்வீராக !” என்று அவர்க்கு அறிவுரை கூறுவார் போல், அவன் அன்பும் ஆற்றலும் அறியப் பாராட்டினர். ' மலேகெழுநாடன் கூடர் வேற்பிட்டன்' குறுகல் ஒம்புமின் தெவ்விர் அவனே, இறுகண்யானை வெண்கோடு பயந்த ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, கார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல் பண்ணமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி, கசைவர்க்கு மென்மை யல்லது, பகைவர்க்கு இரும்பு பயன்படுக்கும் கருங்கைக் கொல்லன் விசைத்தெறி கூடமொடு பொரூஉம் உலக்கல் லன்ன வல்லா ளன்னே.” - (புறம் கள0) தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுள் ஒன்றில், தன் இாரில் மணம் முடித்துக்கொள்வான் வேண்டி, தலைவியை உடன் கொண்டு செல்லும் தலைமகன், இடைவழியில் செல்லும் பாலை கிலத்தின் கொடுமை அவளுக்குத் தோன்ரு திருத்தற் பொருட்டு, 'அடர்ந்து வளர்ந்த கின் தலைமயிரை அழகாக வாரி முடித்து, அதில், மணம் காறும் வெண் கடம்பு மலர்களேச் சூடிக் கொண்டு, அம் மலர்களில் உள்ள தேனை உண்ண வேண்டி வரும் வண்டுகளே ஒட்டாமல், வளை ஒலிக்கும் கின் முன்கைகளைப் பருத்த தோளசையு மாறு வீசி நடந்து என்பின் வரும் கின் அழகே அழகு!” என்று பாராட்டி அழைத்துச் செல்லுகின்ருன் என்று பாடிஞர்; அதில், தன் கூந்தலில் உள்ள மலர்த் தேனை உண்ன வேண்டி வரும் வண்டுகளால் தனக்குத் துயர் நேரும்; ஆகையால் அவற்றை ஒட்டவேண்டும் என் அறிவு தானும் இல்லாதவள் என அவள் இளமையினையும், வண்டுகள் தேன் உண்ண வருகின்றன ; அவற்றை நமக் குண்டாம் துயர் போக்குவான் வேண்டி விரட்டினல், அவற்றின் வேட்கை கெடுமே என்ற எண்ணத்தால் அவற்றை ஒட்டாது செல்கிருள் என, அவள் அருட்குணத் தையும் பாராட்டின்ை; ஆல்ை, அவளோ, தன்னைத் தன் முன் பிறர் பாராட்டுவைத விரும்பாளாதல் அறிந்தவன