பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக உறையூர் முதுகூத்தனுர் உறையூர் முது கூத்தனர் எனவும், உறையூர் முது கூற்றனர் எனவும், உறையூர் முது கொற்றனர் எனவும் வழங்கப் பறும் பெயர்கள் மூன்றும் ஒருவரையே குறிக்கும் எனவும், உறையூர் வாழ்வினாாய இவர், ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து என்ற கூத்துவகைகள் அனைத்தினும் சிறந்த பெரியாராக விளங்கினமையால், இவரை அவர்கால மக்கள், உறையூர் முது கூத்தனர் எனச் சிறப்புப் பெய. ரிட்டு அழைத்தனர் எனவும், கூத்தனர் என்ற அப்பெயர், பின்னர்க் கூற்றனர் எனவும், கொற்றனர் எனவும் மருவி வந்தற்றது எனவும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இவர், தம் பாக்களில், வீரைவேள்மான் வெளியன் தித்தன் என்பானையும், அவன் முரசினையும், பாண்டிய அரசன் ஒருவனேயும், அப் பாண்டியர்க்குப் பெருமை தரும் முத்துக்கள் விளையும் கடற்செல்வத்தையும் எடுத் தோதியதல்லது வேறு வரலாற்றுக் குறிப்புக்கள் எதையும் அறிவித்திலர்: வீரை வேள்மான் வெளியன் கித்தன்.” (நற்: இ.அ). தோளா முத்தின் தெண்கடல் பொருநன், திண்தேர்ச் செழியன்.” (அகம்: க.க.எ). சிறு செல்வம் படைத்த பெருவள்ளல் ஒருவனைப் பாராட்ட முன்வந்த புலவர், மக்கள் செல்வம் உற்ற காலத்திலும், அஃது அற்ற காலத்திலும் எவ்வாறு வாழ்தல் வேண்டும் என்பதை அரிய நயம் தோன்ற எடுத் துக் காட்டியுள்ளார்: “ஒரு தலைவன்; அவன் வாழும் ஊர் அத்துணை வளம் நிறைந்ததன்று; ஆங்குத் தோண்டப் பெறும் கிணறுகள், கற்பாறைகளே கிறைந்து நீர்தருவ: தில்லை; தரும் சிறிது நீரும் உப்பாய்ப் பயன்படாது போம்; இதல்ை கிலம் உழுது வாழ வழிகான அவனூர் மக்கள் வேட்டையாடி வாழ்க்கை நடத்துவர்; அத்தகைய ஊரில்