பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் முதல்த்தகுச் 85. வாழ்ந்த அவன்;. வறும்ைவத்துற்றவிடத்து, அவ்வறுமை கண்டு உளம்குன்றி அடங்கி விடாது, விரைந்து பணி யாற்றி வேண்டுவனவற்றைத் தேடிச் சேர்க்கும் ஊக்க முடையவன்; அவ்வாறு சேர்த்த பொருள் சிறிதே இருப் பினும், தன்பால் உள்ளது சிறிது; ஆதலின், அதை எவர்க்கும் அளிக்காது யானே உண்பேன் என எண்ணுன்; அதைத் தன்பால்வந்து கிற்போர் பலராதலின், இவர் அனே வர்க்கும் கொடுக்க இயலாது ஆகலின், சிலர்க்கு அளித்து, சிலர்க்கு மறுத்தலும் செய்யான்; உள்ளதை உள்ள அனே வர்க்கும் ஏற்றவகை பகிர்ந்தளித்து மகிழ்வித்து மகிழ்வன்; பெருஞ்செல்வம் வந்துற்றதாயின், அக்காலே அவன் வள்ளன்மையினே வாயால் உரைத்தலும் இயலாதாம்; நாடாளும் வேந்தர்கள் தங்கள் அரசவை நோக்கி வரு வார்க்கு வாரிவாரி வழங்குவதேபோல், வாரிவாரி வழங்கு வன்” என்று அவன் இயல்பு கூறுவார்போல் வாழ்வார்க்கு வழிகாட்டியுள்ளார். - இவ்வாறு, அவ்வீரன் இயல்புரைக்க வந்த ஆசிரியர், அவன், இன்மைகண்டு வாடிவிடாது விரைந்து பணியாற் நிப் பயன் பெறுவதற்கு, மழைபெய்து பெருங்குளிர் எடுக்கத் தொடங்கியவுடனே, வெளியிடங்களில் வாழ் இடையைெருவன், அக்குளிர் கண்டு அஞ்சி அடங்கி விடாது, உடனே ஒடித் தீக்கடை கோலால் தீ மூட்டிக் குளிர் போக்கி வாழ்வதையும், அவ்வீரன் தன்பால் உள்ள சிறுபொருளைப் பெரும் விருத்தினர்க்கு வழங்குவதற்குக், கொண்டான் வளமறிந்து வாழும் வகையறிந்த நற்குடி மகளிர், விருந்தினர் பலர் வந்துற்ற வழி, அவ்விருத்து கண்டு, தன்பால் உளது மிகக்குறைவு; வந்தவரோ மிகப் பலர் என்று மனம் கலங்காது, அவர் அனைவரையும் அமர்த்தி, அவர் உளம் கோணுவாறு உள்ளவற்றைப் பகிர்ந்தளிக்கும் செயலையும் உவமை கூறியுள்ளார். ஒரு சிறு செய்யுளில் இத்துணைப் பெரும் பொருளெல்ாம் பொருந்தப் பாடிய புலவர் புலமையைப் போற்று. வோமாக :