பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் முதுகூத்தனர் 87 வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண்மணல், முருகுசாறு கண்பொழில் - பங்குனி முயக்கம். (அகம்: க.க.எ) உறையூர்ப் பங்குனி விழா, அக்கால மக்களிடையே பெரிதும் போற்றப்பட்டு வந்துளது என்பதையும், அப் பங்குனி விழாவின்போது, திருவாங்கத்துப் பெருமானை உறையூர்க்கு எழுந்தருளச் செய்து சிறப்புச் செய்வர் என்பதையும், களவினுட்டவிர்ச்சி” என்னும் இறைய ஞர் அகப்பொருட் சூத்திாவுரையில், ‘இனி, ஊர் துஞ் சாமை என்பது, ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க் கண் பாடில்லையாமாகவும் இடையீடாம் என்பது ; அவை, மதுரை ஆவணியவிட்டமே, உறையூர்ப்பங்குனி யுத்தாமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும் இவைபோல்வன பிறவும் எல்லாம் அப்பெற்றியானபொழுது இடையீடாம் என்பது” எனவரும் உரையும், ரீரங்கத்துக் கோயில் கல் வெட்டுக்களும் (A. R. No. 16 5 1986-87) அறிவித்தல்ை உணர்க. உறையூர் முதுகூத்தனர், செல்வர்கள், கங்கள் சிறு வர் மகிழும் விளையாட்டுப் பொருளாகச் சிறு பறையினே வாங்கித்தருவர் எனவும், அப்பறைமீது அழகிய குருவி யின் ஒவியம் வரையப்பட்டிருக்கும் எனவும், சிறுவர்கள், அப்பறையினைத் தங்கள் தோள்களில் மாட்டிக்கொண்டு கையிற் கொண்ட சிறுகோலால் அடித்து முழக்கி, ஒலி எழல் கண்டும், தம் கைச் சிறுகோல்களால், பறைக்கண் எழுதிய சிறு பறவை அடியுறுவதை, உயிர்ப் பறவைகள் அடிபடுவதே போல் கருதியும் மகிழ்வர் எனவும், தம் காலச் செல்வச் சிரு.ர்களின் சிறுவிளையாடல் ஒன்றையும் குறித்துள்ளார் : , - " பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத் தெழுதிய குரீஇப்போலக் - கோல்கொண் டலைப்புப் படிஇயர். (சற்: மே)