பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - வணிகரிற் புலவர்கள் -- தலைம்களைப் பாலைப் பெருகிலத்தின் வழியே அழைத் துக்கொண்டு தன்னுரர் செல்லும் தலைமகனே, இடை வழியில் உள்ள சிற்றார் வாழ்மக்கள் சிலர் கண்டனர்; அவ்விருவரும் செல்லும் செலவினைக் கண்ட அவர்க்கு, அவ்விருவருள், அவள் அவ்வழியில் அதற்கு முன் வந்தறி யாப் புதியவள். அவன், அவளுக்குத் துணையாகச் செல்லும் ஆண்டகை : இருவரும் கிறையன் பினர்; தன் ஊர் அடைதல் வேண்டும் என்ற வேட்கை மிகுதியால், வழி பருமை மறந்து செல்கின்றனர் என்பன புலனுயின; இவர்க்கு இடைவழில் எதம் ஏதும் உண்டாகாமல் காப்பது நமது கடன் என்று எண்ணினர் ; பொழுதோ போய் விட்டது ; இவ்வழி வந்த வணிகர் கூட்டத்தை வழிப்பறி செய்ய எண்ணிய கொள்ளைக்காரர்கள், அவ்வணிகர் VG வினைத் தாக்குதற்காம் வாய்ப்புடையதோர் நல்லிடம் தேடிப் பின் தொடர்ந்து வந்து, அவ்வணிகர் இச்சிற்றாரில் தங்கிவிட்ட தறிந்து, அவர்களே மேலும் தொடர்தல் இயலாது என்று எண்ணித் தம்பறையினே முழக்கிக் கொண்டே மீண்டு செல்வாராயினர்; அவர்கள் செல்லுங் கால் எழுப்பும்.பறையொலி, அவர்கள் அண்மையிலேயே இருக்கின்றனர் என்பதை அறிவிக்கிறது; இங்கிலையில், இவ்விருவரும் செல்லுதல், நன்றன்று எனத் துணிந்து, வாருள் முதியாய் சிலர், அவ்விளைஞனே அடுத்து, இவையெலாம் எடுத்துக் கூறி, தம் ஊரில் தங்கச் செய் தனர். இந்த நிகழ்ச்சிகளைச் சிறு செய்யுளொன்ருல் விளங்கக் கூறி, அக்காலத்திய இளைஞர்களின் அச்சம் அறியா அன்பு வாழ்க்கையினையும், அவர் துயர் போக்கித் துணை புரியும் மக்களின் அருள் கிரம்பிய உள்ளத்தினையும், இத்தகைய கல்லோர்களுக்கிடையே, வழிப்பறி செய்து வாழும் பொல்லாங்கு மேற்கொண்டார் வாழ்வதையும் வாைந்து காட்டியுள்ளார். எல்லும் எல்லின்று பாடுங் கேளாய்! செல்லா தீமோ சிறுபிடி துணையே! - வேற்றுமுனை வெம்மையிற் சாத்து வர் கிறுத்தென