பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'94 வணிகரிற் புலவர்கள் பறவைகள் ஒலி அடங்கியிருக்குமாறு ஆணையிட்டான் ; அவையும் அவ்வாறே அடங்கி ஒய்ந்தன என்ற இச் செய் தியைத் தலைமகள், தலைவளுேடு கொண்டிருந்த உறவினைக் களவுக் காலத்தே அலர் கூறித் தாற்றிய அவ்வூர்ப் பெண் கள், தலைவனும், தலைவியும் செய்து கொண்ட திருமணத் தால் வாயடங்கப் பெற்றனர் என்பதை அறிவிக்குங்கால் உணர்த்தியுள்ளார். வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பெளவம் இாங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலி அவிக்கன்று இவ் அழுங்கல் ஊரே.’ (அகம் : எ0) தீவினையாளன் ஒருவன், ஒர் இளம் பெண்ணின் கலத்தை நுகர்ந்து, பின் அவ்ளேக் கைவிட்டு விட்டான் ; அப் பெண், அவ் ஆரில் உள்ள ஆன்ருேர் அவைமுன் சென்று முறையிட்டாள் ; அவையினர், அவனே அழைத் துக் கேட்டபோது, ' நான் இவளே அறியேன் ” என்று சூளுரைத்துக் கூறினன்; அவன் சூளுரையினையும் ஏற்றுக் கொள்ளாமல், அவ் விருவருக்கும் உண்டாம் உறவினை அறிவாளைத் தேடி, அவர்கள், உறவு உண்டு என உரைப் பக் கேட்டு, அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்ட்னர் ; பெண்ணின் நலத்தை நுகர்ந்து கைவிட்டதோடு, பொய்ச் குளும் செய்த அத் தீவினையாளனே மாம் ஒன்றில் இறுகப் பிணித்து, அவன் தலையில் நீற்றினேக் கொட்டித் தண்டித் தனர். இந் நிகழ்ச்சியினையும் ஒரு பாட்டில் குறித்துள்ளார். 'திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய அறனி லாளன் அறியேன் என்ற திறன் இல் வெஞ்சூள், அறிகரி கடாஅய் முறியார் பெருங்கிளை செறியப் பற்றி மீறுதலைப் பெய்த ஞான்றை வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. (அகம்: உஇசு)