பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வள்ளல்கள்

அஞ்சின்ை; ஆகவே,அண்ணனேக் கொன்று அமைதிபெற எண்ணினன். ஆனல் குமணனே கொடைவள்ளல்; அருளுடைமையால் அன்புடையார் பலரைப் பெற்றிருந்: தான்்; அன்னர் அவன் அழிவு காண அடங்கியிர்; அவனே அழிக்கத் துணியும் தன்னேயே அழிப்பர்; மேலும், குமணனக் கொல்லுதலும் அத்துணை எளிதன்று; கும். ணன் கொடைவள்ளல் மட்டுமல்லன் ; கொற்றமும் உடை. யான்; பெரும் படையொன்றும் அவன்பால் உளது: அவனேயேயன்றி, அவனைச் சூழ வாழும் அத்துணைப் பேரை யும் நல்வாழ்வில் கிறுத்தவல்ல பெரும்படை அது. "நாண் முரசு இரங்கும் இடலுடை வரைப்பின்கின் தாள் கிழல் வாழ்ார் காலம் மிகுப்ப வளமார் உழந்த வின் தான்ே' (புறம்: க.சு.க) எனப் புலவர்தம் பாராட்டையும். பெற்றுளது அப் படை அதை வென்று, அவனேக் கொன்று வெற்றிபெறல் இயலாது என்பதை அறிந்தான்்; அதனுல் படைவலியால் பெறலாகா ஒன்றைப் பிறிதொரு வழியில் பெறத் திட்டமிட்டான். குமணன் தலையைக் கொணர்வார்க்குக் கோடிப் பொன் கொடுப்பேன்’ என நாட்டில் பறைசாற்றினன். சாற்றி நாள் பல ஆயின; ஆயினும் அவன் கனவு நனவாகவேயில்லை.

இங்கிலையில் பெருந்தலைச் சாத்தனர் என்ற புலவர் முதிரமலை யடைந்தார்; ஆண்டு அவர் குமணனைக் கண்டா கல்லர்; நிகழ்ந்தன அறிந்தார்; குமணன் காட்டில் வாழ் கின்ருன் எனினும், அவனே ஆண்டுச் சென்று கண்டு. யாதேனும் பெற்றுச் செல்ல வேண்டும் என விரும்பினர்; அவர் வறுமை அத்துணைக் கொடிது; மேலும் வாழும் இடம் காடேயாயினும், வருவார்க்கு வழங்கத் தவருன் குமணன் என உறுதியாக நம்பினர்; உடனே, அவன் வாழும் காடு சென்றார், குமணனக் கண்டார்; தம் வறுமை. நிறைந்த வாழ்க்கைக் கொடுமைகளை வகைபெற எடுத்துக் கூறினர்; நின் நிலை அறிந்தும் கின்பால் பொருள்வேண்டி கிற்கின்றேன்; எனக்கு யாதேனும் ஒன்று கொடுத்தே

> 35

அனுப்புதல் வேண்டும்” என்று கூறினர்.