பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 40 வள்ளல்கள்

ஒரியை வென்று காரி அளித்த கொல்லிமலேயைப் பெற்றுப் பெருமகிழ்ச்சி கொண்ட பெருஞ்சேரல் இரும் பொறை, அம்மலையன் உளம் உவக்குறுமாறு தகடுரை முற்றி அதியனே அழித்தான்்; தன்னைப் பகைத்த அதியன் அழிவு கண்டு மலையமான் திருமுடிக்காரியும் மனம்மி கமகிழ்த்தான்்.

மூவேந்தர்கள் ஒற்றுமையுடன் உலகாண்டவரல்லர்; அவர் ஒவ்வொருவரும் பிறரை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணமுடையராவர்; ஒருகுடியில், ஒரு காலத்தே ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் தோன்றி விட்டால், அவன்

பிற அரசுகளே யெல்லாம் பணியவைத்துப் பேராசனுப் வாழவேண்டும் என்று எண்ணுவதும், அவன் ஆற்றலும் செல்வமும் கண்டு மனம் பொருத எனைய அரசர்கள் அனே வரும் ஒன்று கூடி அவனே அழிக்க வழி கோலுவதும் அக் கால வழக்கமாம்; ஒரு குடியிற் பிறந்தார், பிற குடியிற் பிறந்தாரோடு பகைத்து வாழ்தலோடு கின்ருரல்லர் ஒரு குடியிற் பிறந்தவர்களே ஒருவரோ டொருவர் பகைத்துப் போர் மேற்கொள்வர்: அம்மட்டோ தந்தை மகனே எதிர்ப் பன்; மகன் தந்தைமேல் போருக்கு எழுவன்; இதுதான்் பழைய தமிழகத்தின் அரசியல் நெறி.

மலேயமான் திருமுடிக் காரியும், பெருஞ்சோல் இரும் பொறையும் வாழ்ந்த காலத்தே, சோளுடாண்ட சோழ வேந்தருள் சிறந்து விளங்கின்ை குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான்; மலையம்ான் தன் பகைவேந்த யை பெருஞ்சோல் இரும்பொறைக்குப் படைத்துணை அளிக்கின்ருன் என்ற காரணத்தாலோ, அல்லது சோணுட் டில் நடைபெறும் அரசியற் றலைமைப் போராட்டத்தில் தன் தாயத்தார்க்குத் துணை புரிந்தான்் அல்லது புரிவான் என்ற காரணத்தாலோ, கிள்ளிவளவன் மலையமான் திரு முடிக்காரிபால், மாற்ருெணுச் சினங்கொண்டான்; மலையமா ைெடு போரிட்டு வென்று அவன் மக்கள் இருவரையும் கைப்பற்றிக் கொண்டு போய்த் தன் யானையின் காற்கீழிட்

டுக் கொல்லவும் துணிந்தான்்.