பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா I 7 80. போம்மே ருவைவலந்த சாம்புநதம் புக்கந்த மாமேரு வெற்பாய் வருமேரு-கோமகன் 81. வஞ்சிக்கும் ஒதை மகோதைக்கும் மாமதுரை இஞ்சிக்கும் கொற்கைக்கும் ஏறுதொறும் வெஞ்சமத்து 82. முன்நின்று கோட்டு முனைபட் டிறந்திறந்து கல்நின்ற வர்க்கிலகு காப்பணிந்தும்-சொல்நலத்தில் 83. சேர்த்தும் பொருளில் சிறந்த கவிவேந்தர் ஏத்தும் பரணி எழுதியும்-பூத்தரச் 80. வலந்த - சுற்றிவந்த, சாம்புநதம்-நாவல் பழத்தின் சாறு ஒடும் ஆறு. சோழன் மேருவரை சென்றபோது சாம்பூநதத்தில் யானே ஆடியது. அதனுல் மேருவாயிற்று. - 81. வஞ்சி, மகோதை என்பன சேர மன்னனுடைய நகரங்கள். ஒதை -ஆரவாரம், மதுரையும் கொற்கையும் பாண்டியனுடைய நகரங்கள், இஞ்சி - மதில். சேரனுடைய நகரங்களையும் பாண்டிய னுடைய நகரங்களையும் அழிப்பதற்குச் செல்லும்பொழுது. சமம் - போர். 82. கோட்டு முனை கொம்பினது துணி. 8.1-5. போரில் பகைவரின் படை வீரர்கள் இறக்க, அவர்களுக் குக் கல் நட்டு, அதில் பேய்க்குப் பாதுகாப்பாக வேப்பிலையை அணி வ்ார்கள்; சோழனுடைய போர் வீரத்தைப் பாராட்டிக் கவிஞர்கள் பனையோலையில் பரணி நூலை எழுதுவார்கள். பாண்டியனுடைய மாலையைத் தரும் வேம்பும் சேரனுடைய மாலையைத் தரும் பனையும் இந்தச் செயல்களால் அழிந்தன. இவ்வாறு வேப்பம் பொழிலும் பனம் பொழிலும் அழிவதற்குக் காரணமான வீரத்தையுடையது பட்டத்து யானை என்று சொல்ல வருகிரு.ர். 82. கல் நின்றவர்க்கு-இறந்த வீரரின் பொருட்டு. அவர்களுடைய பெயரும் பீடும் எழுதிக் கல்லே நட்டு வழிபடுதல் வழக்கம். இலகு காப்பு அணிந்தும் - விளங்குகின்ற பேய்க்குப் பாதுகாப்பாகிய வேப் பிலையை அணிந்தும். அலகைக் காப்பண்.ந்தும்' என்று பாடமிருப் பின் சிறக்கும். வேப்பிலைக்குக் கடிப்பகை என்பது பெயர். அரவாய்க் கடிப்பகை (மணி. 7:78); கடிப்பகைக்குத் தாதகியம் கண்ணியோ அம்மானே (தனிப்பாடல்). காப்பாக வேப்பிலையைச் செருகுதல் வழக்கம் என்பதை, வேம்பு மனச்செரீஇ', 'வேம்பு சினே ஒடிப்பவும்' (புறநா. 281, 296) என்பவற்ருல் உணரலாம். - 82-3. சொன்னலத்திலும் பொருளிலும், பூத்தர வேம்பும் பன யும் பூக்களைத் தர,