பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 47 237 வனைந்தநவ ரத்ன வகைக்கொரோ ரூசல் புனைந்தநவம் நோக்கிப் புகழ்ந்தாள்-நினைந்து 238. செழுநீலச் சோதி திசைஅனைத்தும் கோத்த கொழுநீலத் துரசல்கைக் கொண்டாள்-தழுவி 239. நிருபன் நிருபாபி டேகன்நிலம் ஏழுக் கொருவன் உருளின் றுவந்தாள்-பெரிதேறி 240. மேகோ தயத்தொரு மின்ஒத்தாள் மால்ஆகப் போகோ தயத்தொரு பொன்ஒத்தாள்-மாகம் 241. குதிக்கும் உததிக் குரை திரை நாப்பண் உதிக்கும் இளஞாயி ருெத்தாள்-துதிக்கடங்கா 242. நேரியும் காவிரியும் காவிரி நீர்நாடும் ஆரியன் கோரமும் ஆரமும்-பேரியம் 237 நவரத்தின வகைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர். ஊச லாக அமைத்திருந்தார்கள். நவம் நோக்கி - புதுமையைப் பார்த்து. 238. கோத்த - செறிந்த நீலமணியால் ஆன ஊசலை அடைந் தாள். ... - 239. நிருப அபிடேகன் - அரசர்களின் முடியாக இருப்பவன். நீலமணி ஊசலைச் சோழமன்னகை எண்ணி மகிழ்ந்தாள். 240. நீல ஊசலுக்கு மேகமும் மடந்தைக்கு மின்னும் உவமைகள். மேக உதயத்து - தோற்றம் செய்த மேகத்தினிடையே. மால் ஆகப் போக உதயத்து - திரும்ாவினுடைய மார்பாகிய இன்பத்தைத் தரும் உதயகிரியில், பொன் - திருமகள். ஊசலுக்குத் திருமாலும் மடந் தைக்குத் திருமகளும் உவமைகள். மாகம் - வானத்தில், - 241. உததி குரை திரை நாப்பண் - கடலில் ஒலிக்கின்ற அலே களுக்கு நடுவே. மாகம் உதிக்கும் எனக் கூட்டுக. - 242-3. சோழனுடைய தசாங்கங்கள். நேரி - சோழனுடைய மலை. காவிரி நீர் நாடு - சோலைகள் பரந்துள்ள சோழ நாடு. ஆரியன்மேலானவன். கோரம் - சோழனுடைய குதிரை. ஆரம் - ஆத்தி மாலை; ஆர் அம்முச்சாரியை பெற்றது. பேரியம் - முரசு. வெற்றி, கொடை, மீணம் ஆகியவற்றுக்கு அடிக்கும் முரசுகள் மூன்று. கொடுவாய் - புலிக்கொடி. மூரி - வலிமையையுடைய அயிராபத்ம் - பட்ட்த்து யானே. புகார் - காவிரிப்பூம்பட்டின்ம். தேன் துளிக்க - தேனின் சுவை உண்டாகும்படி. - --