பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& சங்கர ராசேந்திர சோழன் உலா 243. மூன்றும் கொடுவாயும் மூரிஅயி ராபதமும் ஆன்ற புகாரும்பே ராணேயும்-தேன்துளிக்கப் 244. பாடினுள் பாடற் குலகுருகப் பல்காலும் ஆடிஞ்ள் ஆடும் அமயத்தே-கோடியர் 245. பாணர் விறலியர் பாங்கியர் கைகூப்பி யாணர்த் திருவிரும்பும் இன்பமே-வாள் நுதலே 246. கூந்தல் கலந்து பகல்இரவு கோக்குமேல் வேந்தன் மரபினுக்கு வென்றியோ-காந்தி 247. முழுதும் மறைய முகஏர் மறைத்து வழுதி குலம்சிறத்தல் மாண்போ-முழுதாள் 248. செயற்கை வளவன் திருவுள்ளம் கொள்ளா இயற்கை நமக்கோர் இயல்போ-கயற்கண்ணுய் மலை, ஆறு, நாடு, குதிரை, மாலை, முரசு, கொடி, யானை, நகர், ஆணே என்ற அங்கங்கள் பத்தையும் பாடினுள் (244) 244, ஊசலில் ஆடினள். கோடிப்ர் - கூத்தர். 245. பாணர் இசைபாடும் கலைஞர். விறலியர் - இசைபாடும் மகளிர். யாணர் - சிெல்வத்தை உடைய திரு திருமகள். 246. ஆடுவதனால் உன் கூந்தல் கலைந்து எங்கும் பரவி அதன் கருமையால் இந்தப் பகலில் இரவு வந்து சேருமானல் அது சோழர் குலத்துக்கு வெற்றியாகுமா? இரவு சந்திரனுக்குரியதாதலின் அவன்ைத் தம் குல முதல்வகைப் பெற்ற பாண்டியருக்கு ஆதிக்கம் உண்டாகு மாதலின் இவ்வாறு கூறினர், காந்தி - ஒளி. - 246-7. ஒளி கூந்தவினால் உண்டாகிய இருளினல் மறைய, முகத்தினது அழகை மறைத்து அதனல் பாண்டிய குலம் சிறப்பட்ைதல் பெருமையாகுமா ? முகம் தாமரை போன்றது. அது வாடினல் பாண்டிய குல முதல்வனுகிய சந்திரனல் வந்ததென்று அவனுக்குப் பெருமை உண்டாகிவிடும். முழுதும் ஆள்கின்ற. 248. செயற்கை-செய்கை. பாண்டியன் மரபுச்குப் பெருமையை உண்டாக்குதல் சோழன் திருவுள்ளத்துக்கு உவப்பு ஆகாது. அவ்வாறு அவன் உள்ளம் ஏற்றுக்கொள்ளாத இயற்கையை உண்டாக்குதல் நமக்கு உரியதாகுமா ? இயல்பு - உரிய தன்மை. :