பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சங்கர ராசேந்திர சோழன் உலா 312. குடபால் குடக்கும் குணபால் குணக்கும் வடபால் புடவி வடக்கும்-படுமழைக்குத் 313. தென்பால்அத் தெற்கும் தருக திருமுகம்என் றன்பால் இரக்கும் அளகத்தாள்-நன்பகலோன் 314. அல்லத் துரந்த புலரி அமளியிடை ஒல்லைத் துயிலை உணர்ந்தனளாய்-மெல்ல ぶ I 5. எடுத்திரை விட்ட இளஅன்னம் 676767 மடுத்திரை என்ன மறுகும்-அடுத்துக் 312-8, கூந்தலின் பெருமை. அவள் கூந்தல் மேகம் போல இருத்தலின் நான்கு திசையிலும் உள்ளவர்கள் அவளை நாற்புறத்திலும் சூழ்ந்துகொண்டு, இந்த மேகத்திலிருந்து மழை பொழிவதற்குரிய ஆணையை இடும் திருமுகத்தைத் தருவாயாக' என்று இரப்பார்களாம். 312. குடபால் குணக்கும் - அவளுக்கு மேற்குப் பக்கத்தில் மேற்குத் திக்கில் உள்ளவர்களும், இப்படியே மற்றத்திசைகளுக்கும் கொள்க. குணபால் - கிழக்குப்பக்கத்தில். குணக்கு - கீழைத்திசையில் உள்ளவர்கள். புடவி - பூமி; இதனைக் குடக்கு முதலிய நாற்றிசையி ளுேடும் கூட்டுக; இடைநிலைத் தீவகம். படுமழைக்கு - பெய்யும் மழை யின் பொருட்டு; மழை பெய்வதற்காக. 313, தருக திருமுகம் - ஒலை தா: ஆணயிடுக என்பது கருத்து. 312-3. குடக்கும் குணக்கும் வடக்கும் தெற்கும் படுமழைக்குத் திருமுகம் தருக என்று இரக்கும். ப்கலோன் - சூரியன். . 314. அல்லத் துரந்த புலரி - இருளே ஒட்டிய காலப்பொழுதில். அமளி இடை ஒல்லே துயில் உணர்ந்தனளாய் - படுக்கையிடத்திலிருந்து விரைவில் உறக்கத்தினின்றும் விழித்தவளாகி. 315 எடுத்து இரை விட்ட எடுத்து உணவை உண்ணுமல் தவறவிட்ட மடு திரை என்ன.பொய்கையில் உள்ள அலையைப் போல. மறுகும்-மனம் சுழல்வாள்.