பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 63 316. கனவை நணுகிய காலைக் கழித்த மனுவை இடைக்கண்டு வாடும்-சனதிபன் 317. சாந்தகலம் கூடியும் சாந்துபடக் கூடாத்தன் ஏந்தகலம் செந்தி எழநோக்கும்-வேந்தன் 318. கொழுந்தடந் தோளிற் குவளை மதுவைச் செழுந்தடத் தோளுடு தேடும்-அழுந்தப் 319. புரிந்தன தண்கலவிப் பூசல்வாப் வண்டு நெரிந்தன காளுது நேடும்-புரிந்துபுரிந் 320. தாராமை மன்னன் அருந்தியும் வாய்வெளுப்புச் சாராமை ஆடி தனில்பார்க்கும்-சோர்வாய் 316-20. அவள் துயின்றபொழுது சோழனோடு அளவளாவி இன்புற்றதாகக் களுக் கண்டாள். அதனை உண்மையாக எண்ணி மகிழ்ந்த அவள், துயிலுணர்ந்த பின் அப்போது உண்டான வேறுபாடு களின்றி, இயல்பான நிலையில் அணிகலன் முதலியவை இருக்கக் கண்டு ஏமாற்றம் அடைகிருள். . - 31 6. கழித்த - நீக்கிய. மனுவை - மணியை, இங்கே சினையாகு பெயராய் மேகலைக்கு ஆயிற்று. மேகலை கழன்றதாகக் கனவு கண்டாள்; நனவில் அது கழலாமல் இருப்பதைக் கண்டு வாடினுள். சனதிபன் - சோழன்; சனபதி, சனநாதன், நரபதி என்பன சோழனுடைய பெயர்கள். . . » z 317. சாந்து அகலம் கூடியும்-கண்வில் சந்தனம் அணிந்த மார்பைத் தழுவியும். சாந்துபடக்கூடாத் தன் ஏந்து அகலம் - அந்தச் சந்தனம் படமாட்டாமல் உயர்ந்துள்ள தன் மார்பை உண்மையில் தழுவாமை யால் அவள் மார்பில் சந்தனம் இல்ல்ை ஆயிற்று. r --; 318. குவளை மது - குவளைமாலையினின்று இழிந்த தேன. தன் னுடைய தோளினிடையே இருக்கிறதா என்று தேடுவாள். - 319. புரிந்தனவாகிய குளிர்ந்த கலவியாகிய சண்டையில் வண்டு நெரிந்தன - உட்ைந்தனவாகிய வளைகளே. நேடும் - தேடுவாள். புரிந்து புரிந்து - விரும்பி விரும்பி. . - 320. ஆராமை-தெவிட்டாமல், அருந்தியும்-இதழுறலே உண்டும். ஆடிதனில் கண்ணுடியில். கலவியில் வாய் வெளுக்கும். .