பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


௧௧
மதிப்புரை


இதனை வெளியிட முன்வந்து, இந்தச் சொற்களஞ்சியத்தைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் அருட்செல்வமாகத் தமிழ் உலகிற்கு உதவத் திருவருள் பாலித்த குருமகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களுக்கு என்றென்றும் நாம் நன்றியுடையோம். அன்று ஐயரவர்களைக்கொண்டு சங்க இலக்கியங்களை வெளிவரச்செய்த இந்த ஆதீனமே இன்றும் சொற்களஞ்சியத்தையும் தருகிறது. நிறைந்த உள்ளத்தோடு இப்பணியை இயற்றி வருவது அனைவரும் போற்றற்குரியதாம்.

இத்தொண்டினை அயர்வு என்பது இல்லாமலேயே தொடர்ந்து செய்துவரும் திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் அவர்களுக்கும் என்னுடைய மனம்கலந்த நன்றி உரியது.

இவ்வாறு ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களை வணங்குதற்கும், ஏனையோரை வாழ்த்துதற்கும் வாய்ப்பளித்த திருவருளை நான் இறைஞ்சி அமைகின்றேன்.

அண்ணாமலை நகர் )
1-3-1965 |
இங்ஙனம்,

தெ. பொ. மீனாட்சிசுந்தரன்,

மொழியாராய்ச்சிப்பகுதிப் பேராசிரியர்.