பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சங்க இலக்கியத்தில் உவமைகள்

5. உவமை நயங்களும் தனிச் சிறப்புகளும்

1. மேலே சொல்லியல் மரபுகள் சுட்டிக் காட்டப்பட்டன. இவையேயன்றி உவமை நயங்களும் தனிச்சிறப்புகள் சிலவும் காணப்படுகின்றன. இவற்றை உவமைச் சொல்லியல் மரபு களிலும், பொருளியல் மரபுகளிலும் காட்டுவதைவிடத்தனி இயலாகக் காட்டுவதே பொருந்தும். உவமை நயங்கள் என்றால் ஒவ்வோர் உவமைக்கும் நயமும் சிறப்பும் காட்ட முடியும். எனினும் அவற்றுள்ளும் ஒரு சில ஒற்றுமைப் பண்புகள் இருப்பதால் தொகுத்துத் தர இயல்கின்றது.

அவற்றைக் கீழ்வரும் தலைப்புகளில் காட்ட முடிகின்றது.

1. சூழ்நிலை பற்றிய உவமங்கள்

அரிய காட்சிகளை உவமையாக அமைத்தல்

நடைபெறாத நிகழ்ச்சிகளை உவமையாக்குதல்

2.

3.

4. சேய்மைக் காட்சிகளை உவமையாக்குதல்

5. இடச்சார்போடு பொருந்திய உவமைகள்

6. கதைகளை உவமையில் அமைத்தல்

7. பழமொழிகளை உவமையாக அமைத்தல்

8. உவமைகளில் நகைச்சுவை அமைத்தல்

9. தனித்தன்மை வாய்ந்த உவமைகள்

10. மனநிலையைச் சித்திரிக்கும் உவமைகள்

1. 1. சூழ்நிலை பற்றிய உவமைகள்

உவமைகள் எப்பொழுதும் பொருந்துவன சில; சூழ் நிலையை ஒட்டி அமைவன சில. கூறுவோரின் மனநிலையை ஒட்டி அமையும் உவமைகள் எல்லாச் சூழ்நிலைக்கும், எக் காலத்துக்கும், இடத்துக்கும் பொருந்தா. கூறுவோரின் கூற்றை