பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 103

ஒட்டிப் பொருள்களும் உவமகளும் அமைகின்றன. அவற்றைச் சூழ்நிலை பற்றிய உவமைகள் எனலாம்.

1.1.1. தாயைவிட இனிமையானவர்கள் இல்லை என்பது உலகியல். 'அன்னை போல இனிய கூறியும்' என்ற வழக்கு உள்ளது, அதே தாய் ஒரு தலைவிக்கு நரகமாகக் காட்சி அளிக்கிறாள். அவள் நெஞ்சம் நிரயம் (நாகம்) போன்றது என்று கூறுகிறாள். அவள் காதலுக்கு அவள் அன்னை தடையாக இருத்தல்பற்றி இவ்வாறு கூறுகின்றாள்.

1,1.2. தலைவனால் வெறுக்கப்பட்ட தலைவி தன்னைப் பேய்க்கு உவமைப்படுத்திக் கொள்கின்றாள். அவள் இளமை யும் கவர்ச்சியும் குறைந்து அதனால்தான் தன் கணவனைக் கவர இயலவில்லை என்று தெரிவிக்கின்றாள். தான் குழந்தை பெற்று விட்டதால் அவன் தன்னை வெறுப்பதாகக் கருதுகின்றாள்.

பேய் அனையம் யாம் சேய் பயந்தனமே. - ஐங். 705 1.1.3. தலைவி தன் காதலன் மாட்டுக் கொண்டுள்ள அன்பால் அவன் நாட்டு வறண்டகுழிகளில் மான் உண்டு எஞ்சிய கலங்கல் நீர் தேன் கலந்த பாலினும் இனியது என்று கூறுகின்றாள்.

தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு உவலைக் கூவன் கீழ மான் உண்டு எஞ்சிய கலுழி நீரே - ஐங். 203/24 1.1.4. ஒரு தலைவியின் கூற்றில் தலைவனின் அன்பை விளக்கக் கீழ்வரும் நிகழ்ச்சியை நினைவுபடுத்துகின்றாள், தலைவி தனக்கு வேம்பின் பசுங்காயைத் தந்தாலும் அஃது இனிய கட்டியாக உள்ளது என்றும், ஏனையோர் பாரியின் பறம்பு மலையில் உள்ள தை மாதத்துக் குளிர்ந்த தண்ணிரைத் தந்தாலும் உவர்க்கும் என்றும், தலைவன் கூறியதாகவும் இம்மாற்றங்களுக்குக் காரணம் அன்பின் அடிப்படையே என்றும் தோழி தெரிவிக்கின்றாள்.

வேம்பின் பைங்காய் என்தோழி தரினே தேம்பூங் கட்டி என்றணிர் இனியே பாரி பறம்பில் பணிச்சுனைத் தெண்ணிர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றணிர் ஐய அற்றால் அன்பின் பாலே. -குறு. 196/1-6

1. நற். 28/3.