பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 109

1.4.3 வேனில் காலத்தில் பாயும் ஆறும் ஊர்ந்து செல்லும் அரவுக்கே உவமைப்படுத்தப்பட்டுள்ளது. நீரின் நெளிவும், அதன் ஒட்டமும், ஒளிவிடும் தன்மையும், நீண்டு செல்லும் காட்சியும் சேய்மையில் இருந்து காண்போர்க்கு அரவு செல்வது போலக் காட்சி அளித்தது என்பதாம்.

பெரும்பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப் பல்பொறி அரவின் செல்புறங் கடுப்ப யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில் -நற். 157/2-4

பாம்புஎன முடுகுநீர் ஓட. -அகம், 339/3

இவற்றில் உவமையும் பொருளும் சேய்மைக் காட்சி களாகவே இருக்கலாம். எனத் தோன்றுகிறது.

1.4.4. யானையின் இருமருங்கும் இடப்படும் கயிற்றின் வடிவைப்போல் மலைக்கற்களின் இடையே அமைந்த பாதை அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இவையும் சேய்மைக் காட்சிகளாகும்.

...யானைக் கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி.

-அகம்.128/10-11

1.5. இடச்சார்பொடு பொருந்திய உவமைகள்

ஒரு நிலத்தில் காணப்படும் பொருள் மற்றொரு நிலத்துக்கு உவமையாதல் இல்லை என்பது கிடையாது. காட்டில் வேட்டையாடும் தொழில் கடலில் மீன் பிடித்தலுக்கு உவமிக்கப் படுகிறது.

மரன்மேற் கொண்டுமான் கணம் தகைமார் வெந்திறல் இளையவர் வேட்டெழுந் தாங்குத் திமில்மேற் கொண்டு வரைச்சுரம் நீந்தி. -நற். 111/4-6

எனத் திணை மாறி வந்துள்ளது. பாலை நில மக்களின் வேட்டுவ வாழ்வு. கடற்கரை வாழ்வாரோடு உவமிக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா உவமைகளும் திணை வரையறையன்றியே அமைக்கப்பட்டுள்ளன எனலாம். எனினும் ஒரு சில உவமை கள் அவ்வந்நிலத்துச் சூழ்நிலையோடு இயைத்துப் பேசப்