பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 121

யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம்வீழும் காமர் நடக்கும் நடைகாண். -கலி,94/31-33.

1.8.7. சிலேடை அமைப்பதாலும் நகைச்சுவையை அமைக்க முடிகிறது. சிலேடைப் பொருளே சொல்வழக்கில் நயம் விளைவிப்பதற்கும், அதன் வழி நுட்பமான நகைச் சுவையை உண்டாக்குவதற்கும் காரணம் எனக்கூறலாம். அத்தகைய நகைச்சுவை உவமச் செய்தியில் அமைந்துள்ளது: வேங்கைமரத்திற்கும் புலிக்கும் உள்ள உவமத் தொடர்பை ஒட்டிக் கீழே வரும் தொடர் அமைக்கப்படுகின்றது.

வேங்கையும் புலி ஈன்றன. -நற். 399/1.

வேங்கைமரமும் பூக்களை ஈன்றன (புலி-பூ) என்ற ஒரு பொருளும், வேங்கைமரமும் புலிக்குட்டியை ஈன்றது என்ற நுட்பப்பொருளும் இதில் அமைந்துள்ளன.

1.9. தனித்தன்மை வாய்ந்த உவமைகள்

மேற்காட்டப்பட்ட உவமைகள் பெரும்பாலும் அக் காலப் பொதுமரபினை உணர்த்துகின்றன. பல புலவர்கள் இம்மரபுகளைப் போற்றி எடுத்தாண்டுள்ளனர். ஒருசில உவமை கள் புலவர்களின் தனிப் படைப்பாகும். அவை அவர்களின் தனித்திறமையையும், உவமைகளின் சிறப்பையும் காட்டு கின்றன. அவை அவர்கள் சொல்லாற்றலையும் புலப்படுத்து கின்றன. அவ் உவமைகளைப் படைத்த புலவர்களைப் பிற்காலப் புலவர்கள் போற்றிப் பாராட்டினர். அதனால் அவ்வுவமைகளைப் படைத்த புலவர்களின் பெயர்களையே அவர்கள் தீட்டிய உவமைகளைக் கொண்டு உணர்த்தத் தொடங்கினர். அவை அவர்களுக்குக் காரணப் பெயர்களாக அமைந்துவிட்டன. அவர்களின் இயற்பெயர் மறைந்து அவையே நிலைத்துவிட்டன. அவர்கள் எடுத்தாண்டுள்ள உவமைகளை வேறு எவரும் எடுத்தாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்பெயர்கள் ஈண்டு அகரவரிசையில் தரப்படுகின்றன.

1.9.1. அனிலாடு முன்றிலார்: அணிலாடு மூன்றில் புலம்பில் போல’ என்னும் உவமை தலைவியின் பிரிந்த நிலையில் அவள் வெறிச்சிட்ட உள்ளத்திற்கு உவமையாக