பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 129

அந்நினைவு தலைகொளப் பார்த்தலும், கட்குடியன் குடித்த மயக்கத்தில் தான் குடித்து விட்டதை வாய்விட்டுக் கூறலும், சூதாடுபவன் தான் நினைத்த ஆட்டம் வெற்றி பெறும் பொழுது மகிழ்தலும் இழக்கும்பொழுது வருந்துதலும்.

மனநிலையைச் சித்திரிக்கும் நுட்ப அழகுகள் வாய்ந்த உவமைகளாம். இம்மனநிலையைப் புலப்படுத்தும் உவமை கள் கலித்தொகையிலேயே மிகுதியாக வந்துள்ளன. ஆறு இடங்களில் வந்துள்ளன என்பது மேலே காட்டப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு சான்றுகள் புறத்திலும் பரிபாடலிலும் அமைந்துள்ளன.

1.10.2. ஒரு குறிப்பிட்ட இடச் சூழ்நிலையில் வாழ்பவர், அவர்கள் வாழும் சூழ்நிலையில் இருப்பதையும் நடப்பதையும் கவனிப்பதில்லை. பாரியின் பறம்பு மலையில் உள்ள பனிச் சுனைத் தண்ணிர் அங்கு வாழ்வோர் கவனித்துச் சிறப்பிப்பது இல்லை என்ற செய்தி புறநானூறு தரும் உவமையில் காணப்படுகிறது.

1.10.3. காதலர் இருவர் ஒருவரையொருவர் தழுவி அணைத்துக் கொள்ளும் பொழுது தம் மன வலிவை இழந்து அவ் உணர்வுக்குத் தம்மை முழுவதும் அளித்து விடுகிறார்கள் என்ற நுட்பமான மனநிலை பரிபாடலில் உணர்த்தப்படுகிறது.

மேற்காட்டிய சான்றுகள் மாந்தரின் செயல்களையும் மன நிலைகளையும் காட்டும் நயங்கள் பெற்றுச் சங்க இலக்கிய உவமைகளுக்குச் சிறப்புத் தருகின்றன.

2. சங்க இலக்கிய உவமைகள் சொல்லியலாலும் பொருள் அமைப்பாலும் தனி மரபுகள் பெற்று விளங்கின, அடுத்த தலைப்பில் பொருள் மரபுகள் காட்டப்படுகின்றன. உவமைகள் ஒவ்வொன்றும் தனித்தனி நயங்கள் கொண்டவை எனினும் அவற்றுள்ளும் ஒரு சில ஒற்றுமைப் பண்புகள் அமைந் துள்ளன. அவையே மேலே காட்டப்பட்டன. அதனால் ஏனைய உவமங்களில் நயங்கள் இல்லை என்பது கருத்து ஆகாது. கற்கின்றவர் காணும் மனநிலைக்கு ஏற்ப உவமை நயங்கள் விரிந்து அமையும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டு அனைவரும் கொள்ளத்தக்க உவமை நயங்களாக மேலே சில காட்டப்பட்டன.

1. கலி. 108/22-23. 2. கலி. 115/1-3. 3. கலி. 136/5-16 4. புறம். 176/9-10 5. பரிபாடல். 6/20-22