பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சங்க இலக்கியத்தில் உவமைகள்

மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் வலியும் தெறலும் அளியும் உடையோய்.

-புறம். 1/1-8. என்னும் புறநானூற்றுப் பகுதி இதற்குச் சிறந்த எடுத்துக்

காட்டாகும்.

1.1.2.2. இவ்வாறே ஞாயிறும் திங்களும் இணைத்துக் கூறல் அக்காலத்தில் பயின்ற வழக்காக உள்ளது.' மற்றும் ஞாயிறும் திங்களும் போல நிலைத்து வாழ்க என்று கூறும் மரபும் இருந்துள்ளது என்பது தெரிகிறது." வான்மழை, மணல் தொகுதி, விண்மீன் முதலியவற்றை எண்ணியல் மரபுகளாக உவமையில் ஆண்டுள்ளனர் என்பதற்குச் சான்றுகள் மிகுதி யாகக் கிடைக்கின்றன. இவற்றை ஊர்களோடும் குறிப்பிட்ட இடங்களோடும் சார்த்திக் கூறும் மரபும் இருந்துள்ளது:

1.1.2.3. மழை, இடி, மின்னல் முதலியவற்றை மிகுதியாக உவமைப்படுத்தியுள்ளனர். மழை குளிர்ச்சிக்கும், இடி பேரோசைக்கும், மின்னல் தோன்றி மறையும் ஒளிக்கும் உவமையாயின. மழை கொடைக்கு உவமையாக விளங்கியது அக்காலச் சிருப்பு வழக்காகும். கொடையைப் பற்றிய பாடற் செய்திகள் அக்கால இலக்கிய வழக்கில் இடம் பெற்றமையால் அச்செய்திக்கு மழை மிகுதியாக உவமையாகியது எனலாம்.

1.1.2.4. தீயிலே அழிவினைக் கண்டதோடு அதன் அழகிய ஒளி நிறத்தைக் கண்டு அதனை மலர்களுக்கு

1. பரி. 1-18-11; புறம், 6/27-28, 25/3.6, 55/13-15; 56,22.25, 59/6-12;

231/5-6, 396/26-27; பத். 4,181, 6/768.770, 781. 2. புறம். 927-29; 56/23-25; பத். 6/768-770, 718; பதி. 88/36-39;

பதி. 90/17-18; புறம். 396/26.29. 3. சொல்லியல் மரபுகள் என்னும் தலைப்பில் 1.3.3. பிரிவில்

காட்டப் பட்டுள்ளன. 4. மிகுதி பற்றிச் சில காட்டப்படுகின்றன: பதி. 43/14-30; 64/18: கலி.