பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை இறைச்சி 175

உள்ளுறுத் திதனோடு ஒத்துப்பொருள் முடிகென உள்ளுறுத் திறுவதை உள்ளுறை உவமம்.

-தொல்.அகம்.48

3.4.4. உள்ளுறை உவமம் குறிப்பாகக் கொள்ளத்தக்கது என்றும், ஏனை உவமம் வெளிப்படையாக உணரத்தக்கது என்றும் விளக்கப்படுகிறது.

ஏனை உவமம் தான் உணர் வகைத்தே.

-தொல்.அகத் 49.

3.4.5. உள்ளுறை ஐவகை அமைப்புகளைக் கொண்டு விளங்குமென்பர். உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என்னும் மரபுகளைப் பெற்று விளங்கும் என்பர்.

உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்புஎனக் கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே.

-தொல்.பொருள்.242

உடனுறை என்பதற்கு இறைச்சி என ஆசிரியர் நச்சினார்க் கினியர் பொருள் கொள்வர்,எனவே,இதில் இறைச்சி ஆகிய குறிப்புப் பொருளும், உவமம் ஆகிய பொருள் கொள்ளத் தக்க அமைப்பும், சுட்டிக் கூறும் இயல்பும்,நகை உணர்வும், சிறப்புப் பொருளும் அமைதல் இதன் தனிஅமைப்பாகும். சிறப்பு என்பதற்கு ஏனை உவமம் உள்ளுறை உவமத்தைச் சிறப்பித்து அடையாக நின்று பொருள் உணர்த்தல் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தருவர். இவ் ஐவகைப் பகுதிகளைக் கொண்டு விளங்குவது உள்ளுறை எனினும்,உவமும் குறிப்புப் பொருளும் இவற்றின் அடிப் படைகள் எனலாம்.

3.4.6. இவை நுட்பமாகவே உணரும் திறத்தன என்பதும் வற்புறுத்தப்படுகிறது. இப் பொருளைக் கொள்வதற்கு கூர்ந்த நுட்பமான உணர்வும் பொருளில் துணிவும் தேவை என்பதும் வற்புறுத்தப்படுகின்றது. எனவே, அனைவர்க்கும் இவை எளிதில் விளங்கும் திறத்தன என்று கூற இயலாது.

பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி முன்னை மரபிற் கூறுங் காலை துணிவொடு வருஉந் துணிவினோர் கொளினே.

- தொல்.பொருள்.208