பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை இறைச்சி 183

இவ்வாறே ஏனைய இடங்களிலும் பொருட் புறத்தவாக வந்த இறைச்சிப் பொருள்கள் இவ் உணர்வுகளின் அடிப் படையில் அமைந்துள்ளன என்பது உரைக் குறிப்புகளால் விளங்குகின்றது.

4.7, புறநானூற்றில் குறிப்புப் பொருள் அமைந்துள்ள பகுதிகள் மூன்று வந்துள்ளன. இதன் பழைய உரையாசிரியர் அவற்றை உள்ளுறை என்றே குறிப்பிடாமல் வெறும் குறிப் புரை மட்டும் தருகின்றார். அவை உள்ளுறை இறைச்சி ஆகிய தன்மைகளைப் பெற்றுள்ள போதும் உள்ளுறை என்றோ இறைச்சி என்றோ குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். எனவே உள்ளுறையும் இறைச்சியும் அகப்பொருளுக்கே உரிய உவமைப் பொருள் நய உத்திகள் என்னும் மரபு போற்றப் பட்டமைக்கு இவை கான்று பகர்கின்றன எனலாம்.

4.8. உள்ளுறையும் இறைச்சியும் உவமைகளாகக் கொள்ளும் பொழுது உரையாசிரியர்கள் இரண்டு வகை நெறி களைக் கையாளுகின்றனர். மொத்தமாகத் தொகைப் பொருளாக உவமைகளைக் கொள்ளுதலும், ஒவவொன்றனோடு தனித்து இயைத்துப் பொருள் கொள்ளுதலும் என இருவகை நெறிகளை மேற்கொள்ளுகின்றனர்.

4.8.1. உள்ளுறை (தொகைப் பொருள்): உரை: 'பிடி புலம்புமாறு புலியானது களிற்றைத் தாக்கிக் கொல்லா நிற்கும் நாடன் என்றதனால் இரவு இந்நெறியின் கணவரின் யாம் புலம்புமாறு எமர் என்னைஏதம்செய்யா நிற்பர் என்பதாம்.'நற். 48/35உரை

4.8.2. உள்ளுறை (விரித்துக் கூறல் அல்லது தனித்தனி இயைத்தல்): 'கனி தலைவியாகவும், தும்பி தோழி யாக வும், அலவன் தம்மேல் தவறிழைக்கும் தமராகவும், இறைதேர் நாரை தலைவனாகவும், கொண்டு கனியைத் தும்பி மொய்த் தலும் அலவன் கைப்பற்றிக் கொள்ள நாரை வரக்கண்டு விட்டது போலத் தலைவியைத் தோழி சார்ந்திருப்பவும் தமர் முதலா யினார் இற்செறிப்பத் தலைவன் வரலும் அவர் மகட்கொடை நேர்ந்து இற்செறிப் பொழித்தார் என்றதாம்'. நற்35/27 உரை.

இறைச்சி (விரித்துக் கூறல்): 'குறுமாக்கள் தலைவியாகவும் எருமையில் பால் மிகுதியாகக் கறக்க விரும்புதல் நோன்பின் பயனை மிக விருமபுதலாகவும், அவற்றை ஊர்ந்து செல்லுதல் தைத் திங்கள் விடியல் நீராடச் சொல்லுதலாகவும் அதற்கேற்ற வாறு கொள்க."

4.9. தெய்வத்தை வைத்து உள்ளுறை அமைவது இல்லை என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். புள்ளும் விலங்கும் செடி கொடிகளும் உவமைக்கு இடமாதல் போலத்தெய்வங்கள்