பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சங்க இலக்கியத்தில் உவமைகள்

உருவச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு நிலவுத்திகழ் மதிய மொடுநிலன் சேர்ந்தாங்கு உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணி

-புறம். 25/3-6

12.5.2. திங்களுள் தீ தோன்றுவது என்பது நடவாத நிகழ்ச்சியாகும். தலைவன் வாய்ச் சொல்லில் பொய்மை தோன்றினால் அது திங்களில் தீத் தோன்றியது போல ஆகும் என்று கூறப்படுகிறது.

குன்று அகல் நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றில் திங்களுள் தீத்தோன்றி யற்று. -கலி, 412 3-24 இதே கருத்து மீண்டும் அப்பாடலில் இரண்டு இடங்களில் வேறு வகைக் கற்பனைகளோடு இயங்குகின்றன. கலித் தொகையில் ஒரே கருத்தை மூன்று முறை சொல்லும் பொது மரபை ஒட்டி உவமைகளும் மூன்று கூறப்படுகின்றன.

தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில் சுடருள் இருள் தோன்றி யற்று. -கலி, 41/37-38 ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கய்த்துள் நீருள் குவளைவெந் தற்று -கலி, 41/30-31 திங்களுள் தீத்தோன்றலும், சுடருள் இருள்தோன்றலும், நீருள் குவளை வேதலும் இல்பொருள் உவமைகளாம்.

12.5.3. விண்ணிலே திலகமொடு கூடிய திங்கள் இருப்பது இயலாத காரியம். அது கீழ்வரும் உவமையில் இடம் பெற்றுள்ளது.

மாக விசும்பில் திலகமொடு பதித்த திங்கள் அன்ன நின் திருமுகம். -அகம். 253/24-25 12.6. எடுத்துக்காட்டு உவமையணி

பொதுவாக எல்லா உவமைகளையும் எடுத்துகாட்டுகள் என்று கூறிவிடலாம். எனினும் இதில் கூறப்படும் செய்திகள் அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய பொதுச் செய்திகளாக இருக்கும் என்பது இதன் தனிச் சிறப்பாகும். இதில் கூறப்படும் உவமச்செய்திகள் அனைவரும் அறிந்தவையாக இருக்கும். இவை பிறிதுமொழிதல் அணியைப் போலப் பழகிய செய்தி