பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சங்க இலக்கியத்தில் உவமைகள்

மணிபோலத் தோன்றும் மணிபோலத் தோன்றும் மணிபோலத் தோன்றும் என் மேனியைக் துன்னான் துறந்தான் மலை -கலி 41/32-34

12.14.7. மூன்று உறவுடைய பொருள்களுக்கு மூன்று தனித்தனி உவமைகளை அடுக்கிக் கூறி அவற்றை ஒரு முழு வருணனையாக அமைத்து முடித்தலும் இக் கலத்தொகையில் காணப்படும் மற்றொரு சிறப்பியல்பாகும்.

முதல் தாழிசையில் பல்லை முல்லைக்கும், அடுத்த தாழிசையில் கூந்தலை நீலமணிக்கும், அதன் அடுத்த தாழிசை யில் கொங்கையைத் தாமரை முகைக்கும் உவமைப்படுத்திக் கூறியுள்ளனர்.

நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்த செறிமுறை பாராட்டினாய் மற்றெம்பல். கலி. 22/9-10

நெய்யிடை நீவி மணியொளி விட்டன்ன ஐவகை பாராட்டினாய் மற்றெங் கூந்தல். கலி. 22/12-13

குளனணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் இளமுலை பாராட்டினாய். -கலி, 22/15-16

இவ்வாறு வருதல் அருகிய வழக்கு எனினும் ஒரு பொருளுக்கு மூன்று பொருள்கள் உவமைகளாக அமைதல் பெருகியவழக்கு என்று கூறலாம்.

12.15. பிறிது மொழிதல் அணி

பொருளைக் கூறாமல் வெறும் உவமையை மட்டும் கூறி விடுதல் ஒரு தனி அமைப்பாக உள்ளது. இவை பழமொழி களைப் போல அமைந்து எந்தச் சூழ்நிலைக்கும் பொருந்து கின்றன. சூழ்நிலையே அதன் கருத்தை வெளிப்படுத்துகிறது. இவற்றை ஒட்டு அணி என்றும், பிறிது மொழிதல் அணி என்றும், நுவலா நுவற்சி அணி என்றும், உவமைப் போலி என்றும் கூறுவர்.

கருதிய பொருள் தொகுத்து அது புலப்படுத்தற்கு

ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப

-தண்டி. சூ 52

1. தண்டி. சூ. 52 - உரைப் பகுதி.