பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 39

12.15.1. கலித்தொகையில் வரும் ஒரு பாடல் பிறிது மொழிதல் அணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மாந்தர் நீரை விரும்பிப் பருகுவது அது நீருக்கு இனிமை தரும் என்பதால் அன்று; அவரவர் வேட்கையைத் தணிவிக்கும் என்பதால்தான்; ஒர் இளைஞன் தான் விரும்பும் ஒருத்தியைத் தழுவிக் கொள்வதில் தவறு இல்லை என்று சுட்டிக் காட்டவே இவ் எடுத்துக்காட்டைத் தருகின்றான்.

வேட்டார்க்கு இனிதாயின் அல்லது நீர்க்கு இனிது என்று உண்பவோ நீருண்பவர். -கலி, 62/10-11

12.15.2. மரம் சாகும் அளவிற்கு அதனை வெட்டி மருந்தாக மக்கள் கொள்ள மாட்டார்கள். உடல் உரம் அழியும் அளவிற்குத் தவத்தை மேற்கொள்ள மாட்டார்கள். மக்கள் வளம் கெடும் அளவிற்கு மன்னர் பொருளைப் பெற முனையார் என்ற செய்திகள் பிறிது மொழிதலாக நற்றிணையில் அமைகின்றன.

மரஞ்சாம் மருந்தும் கொள்ளார் மாந்தர் உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர். -நற். 226/1-3

12.15.3. நீர் வேட்கை உடையவர் தெளிந்த நீர்ப் பரப்பினை உடைய கடல் நீரைப் பருகச் செல்லார்; ஆவும் பிற விலங்கும் சென்று உண்ணா. அதனால் கலங்கிய சேறொடு பட்ட சிறுமையை உடையதாயினும் உண்ணின் கரைகளில் பலர் சென்று வருவர். அதனால் அங்கு வழிகள் பல ஏற்படும் என்னும் பிறிது மொழிதல் செய்தி கூறப்படுகிறது.

தெண்ணிர்ப் பரப்பின் இழிழ்திரைப் பெருங்கடல் உண்ணார் ஆகுப நீர்வேட்டோரே ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச் சேறொடு பட்ட சிறுமைத் தாயினும் உண்ணிர் மருங்கில் அதர்பல ஆகும் -புறம். 204/5-9

இதில் ஈவோர் சிறப்பும் ஈயார் தாழ்வும் உணர்த்தப் படுகின்றன.

12.15.4. புலி தான் இரையாகக் கருதி யானை மீது பாய்ந்து அது தப்புமானால் மனம் சோர்ந்து எலியாவது கிடைத் தால் போதும் என்று மன நிறைவு கொள்ளாது. இப் பிறிது மொழிதல் அணி உயர்ந்த குறிக்கோளைக் கொண்டவர்கள் தாழ்ந்து போவது இல்லை என்ற செய்தியை உணர்த்துகிறது.