பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சங்க இலக்கியத்தில் உவமைகள்

புலிபார்த்து ஒற்றிய களிற்றிறை பிழைப்பின் எலிபார்த்து ஒற்றாதாகும். -புறம். 257/16-17

அதனால் சிறந்த வள்ளல்களையே நாடிப் பரிசில் பெறத் தாம் விரும்புவதாகப் புலவர் கூறுகின்றனர்.

12.15.5. நற்றிணை உரையாசிரியர் கீழ்வரும் பகுதியைப் பிறிது மொழிதல் எனக் குறிப்பிடுகிறார். மருத நிலத்து வாழ் உப்பு வணிகர் தம் நாட்டில் விளைந்த வெண்ணெல்லைக் கொண்டு அயல்நாட்டில் நெய்தல் நிலங்களில் உப்புக்கு மாறுகொண்டு அதனை ஊர்கள் தோறும் சென்று விலைபேசி விற்பர். அவர்கள் தம் வண்டிகளோடு மணல் நெறிகளில் செல்லும் பொழுது அவர்களோடு பழகிய ஊரவர்க்குப் பிரிவு உணர்ச்சியைத் தரும் என்ற கருத்துப் பிறிது மொழிதலாகக் கூறப்படுகிறது. அது போலத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்லுதல் இன்னாமையைத் தரும் என்று கூறப் படுகிறது.

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து

பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி

அவனுறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும் இன்னாதாகும்.

- நற் 183/1-5

12.15.6. இவ் உவமைகள் சூழ் நிலைகளால் பொருள் உணர்த்தும் சிறப்பு உடையன. உள்ளுறை இறைச்சிகளைப் போலக் குறிப்புப் பொருளும் நுட்ப அழகும் பெற்று விளங்குகின்றன. இவை உருவகத்தைப் போன்ற செறிவும் நிறைவும் கொண்டு இலங்குகின்றன.

12.16. பொது தீங்கு உவமை

ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு நிகராக அதற்குத் தக்க உவமையைப் பொருத்திக் காட்ட முடியாது என்றும், தனக்குத்தானே உவமை யென்றும் கூறும் தனி அழகினைப் பொது நீங்கு உவமை என்பர். பொதுவாக இறைவன் ஒருவனுக்குத்தான் இவ்வாறு சிறப்பித்துக் கூற இயலும். திருமுருகாற்றுப்படையில் முருகன் பொது நீங்கு உவமையால் சிறப்பித்துப் பாடப் பெறுகிறான்.