பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சங்க இலக்கியத்தில் உவமைகள்

12.17.2. மனித வடிவங்களுக்கு இயற்கைப் பொருள் களை உவமையாக அமைப்பது கவி மரபாக விளங்கியது. அம் முறையை மாற்றி இயற்கைப் பொருள்களுக்குப் பொதுவாக மனித வடிவங்களையும் சிறப்பாக மகளிர் நலன்களையும் வடிவ அமைப்புகளையும் உவமையாகக் கூறுவர். இவ்வாறு பொருள்களுக்கு மகளிர் வடிவத்தை உவமையாகக் கூறுவதால் அப்பொருள்களுக்குத் தக்க ஒவிய வடிவத்தைத்தர கற் பனைக்குக் கொண்டு வர இயல்கிறது. அதனால் இக்கூற்றுகள் கற்பனை வளமும் செறிவும் பெறுகின்றன. இயற்கைப் பொருள்களுக்கு உயிர் ஊட்டி இயக்க வைக்க முடிகிறது. பொதுவாக மகளிரின் விழிகள், கூந்தல், கரங்கள், பல் முதலியவை உவமைகளாகக் கொண்டு வந்து நிறுத்தப் படுகின்றன.

12.17.3. சில இடங்களில் புதுமை நிலையை உண்டாக்குவதற்காக அல்லாமல் தாமாகவே இடம் மாறிவருதல் உண்டு. இதனை வெறும் 'இடமாற்றம்' என்று கூறலாமே ஒழிய 'விபரீத உவமை' என்று கூறுவதற்கில்லை. எடுத்துக்காட்டாகக் கிணைப்பறைக்கு ஆமையின் வயிறு உவமிக்கப்படுகிறது.' ஆமையின் வயிற்றுக்குக் கிணைப்பறை உவமையாகிறது." இவ்வாறு வரும் இடமாற்றத்தில் எது அடிப்படை நியதி, எது மாற்றம் என்று கூறுவதற்கில்லை. இவை இயல்பாக அமைவன வாகும.

எந்தத் தனியழகையும் உண்டாக்கக் கவிஞன் கருதுவதாகக் கூறமுடியாது. அதனால் மனித உருவினை இயற்கைப் பொருள்களுக்கு உவமையாக அமைத்தல் விரும்பி அமைப்பது எனக் கூறலாம்.

12.17.4. மனித வடிவத்திற்கு இயற்கை உவமையாக அமைதல் பொது நியதி எனக் கூறலாம். இப்பொது நியதி மாறி இயற்கைக்கு மனித உருவம் உவமையாக அமைதல் சிறப்பு நியதி எனக் கூறலாம். இவ்வாறு அமைதல் அருகிய வழக்காகும். இவை மட்டுமே விபரீத அணி எனக் கொள்ளல் தகும். எடுத்துக்காட்டாக 'நெய்தல் மலர் கண்களுக்கு உவமை யாகிறது. இது பொது நியதி. நெய்தல் மலர் கண்களைப் போல

1. புறம். 387/1-4. 2. அகம். 356/2.4.