பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சங்க இலக்கியத்தில் உவமைகள்

பூத்த நாடு (வளம் நிறைதல்) -பதி. 13/26 பூத்த புகை (நிறைதல்) பரி. 16/53 அந்தி பூப்ப (விளக்கம்) -அகம். 71/1 பூத்தன்றுவையை வரவு (நிறைதல்) -பரி. 16/19

மீன் பூத்தல் (ஒளிவிடுதல்) -பதி. 90/31; பரி. 16/36, 38

புறம். 20|4; 19917, 399/31; பத். 1/169; 4/477. பூங்கண் வேங்கை (அழகு நிறைதல்) -அகம். 182/1 பூத்தனள் நங்கை (நிறைவு பெறுதல்) -பரி. 16/30 பூத்தனள். நீங்கு (நிறைவு பெறுதல்) -16/30

7.4.6. இதே போல மலர்தல் என்னும் உருவகச் சொல்லும் விளக்கமுறுதல் என்னும் பொருளில் வழங்குகிறது.

மலர் மார்பன் -பதி. 20/2 மலர்ந்த நோக்கு -பதி. 60/7 மலர்தலை உலகம் -பதி. 88/3

7.4.7. இமைத்தல் என்னும் உருவகச் சொல் ஒளி விடுதல் என்னும் பொருளில் வழங்குகிறது.

அழல் இமைக்கும் -பதி. 3/94

7.4.8. ஏறு என்னும் உருவகச் சொல் முதற்கண் வலி வுள்ள விலங்கின் ஆண் இனத்தினைக் குறித்து வந்தது. அது மாந்தருள் வலிமை மிக்கவரையும், உயர்ந்தோரையும், அழிக்கும் ஆற்றலுடைய மழை, இடி ஆகிய இயற்கைப் பொருள்களையும் பின்னர் உணர்த்தத் தொடங்கியது.

மள்ளர் ஏறு (மன்னர்களுள் உயர்ந்தோன்) -பதி. 38/10 குட்டுவர் ஏறு (மன்னர்களுள் தலைவன்) -பதி. 90/26

புலவர் ஏறு (புலவர்களுள் சிறந்தோன்) -1/2; 6/8 பரதவர் போர் ஏறு (பரதவர்களுள் உயர்ந்தோன்) -6/44 புயல் ஏறு (ஆற்றல் மிக்க மழை) -பத். 51/28 உறு மின்ஏறு (ஆற்றல் மிக்க இடி) -பத். 601.63

7.4.9. நீந்து என்னும் சொல் நீரைக் கடத்தல் என்னும் பொருளில் வழங்கிய ஒன்று ஏனைய அரிதிற் கடத்தல்

எல்லாவற்றிற்கும் வழங்குகின்றது.

வரை நீந்தி -பத். 6/57 குன்றம் நீந்தி -நற். 2/2.6

மணல் நீந்தி -நற். 183/3