பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சங்க இலக்கியத்தில் உவமைகள்

பட்டன. இவை அனைத்தும் வடிவு பற்றிப் பிறழ உணர்ந்த செய்திகளாகும். -

மேலே காட்டிய சான்றுகள் அனைத்தும் பிறழ்வு பட உணர்தலாகக் கூறல் என்னும் உத்தியின் அடிப்படையைக் கொண்டு விளங்குகின்றன. இத்தகைய சான்றுகள் மிகுதியாகப் பயில்வதால் பிறழ உணர்தலாகக் கூறுவது உவமைகளைப் புணர்த்துவதில் ஒர் உத்தியாகச் சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டது என்று முடிவு செய்யலாம்.

1.2. துணைப்புணர் உத்தி

மேற்காட்டிய உத்தியே அன்றி மற்றோர் உத்தியும் இவ் உவமைக்குள் காணப்படுகிறது. நேராக உவமையையும் பொருளையும் உவமைப்படுத்திக் கூறாமல் அடுத்தடுத்து வைத்துக் குறிப்பாக உவமையும் பொருளுமாக இயைக்கின்ற நிலையை உண்டாக்க முடிகிறது. இதனைத் துணைப்புணர் உத்தி என்று கூறலாம். இது முன்னையதைப் போன்று பயில்வு பெறும் உத்தி என்று கூறுவதற்கில்லை. பரிபாடலில் மட்டும் இவ் உத்தி கையாளப்படுகிறது.

1.2.1. இயற்கையையும் கலை நிகழ்ச்சிகளையும் அடுத்தடுத்து வைத்து ஒன்று மற்றொன்றுக்கு உவமை யாகின்றது என்று கூறாமல் ஒன்று மற்றொன்றனோடு மாறு கொண்டு போட்டி இடுவதாகப் பரிபாடல் கூறுகின்றது. அவை ஒன்று மற்றொன்றுக்கு உவமையாகின்றது என்பது ஆசிரியர் தரும் குறிப்பாகும். யாழ் வண்டின் ஒலியோடும், குரல் வண்டின் மற்றோர் இனத்தோடும், முழக்கிசை நீர் வீழ்ச்சியின் ஒசை யோடும், விறலியின் அசைவு பூங்கொடியின் அசைவோடும், பாடினியின் பாடல் மயிலின் அகவல் ஒசையோடும் இணைக்கப்படுகின்றன. இவை ஒன்றோடு ஒன்று மாறு கொண்டு இசைப்பதாக வருணிக்கப் படுகிறது.' இதே போன்ற கருத்தும் அமைப்பும் மற்றோர் இடத்திலும் இடம் பெறு கின்றது."

1.3. வாழ்த்தியல் மரபுகள்

புலவர்கள் அரசர்களை வாழ்த்திய போது ஒரு சில சொல்லியல் மரபுகளை மேற்கொண்டு வந்தனர். அவர்கள்

1. பரி. 1719-21. 2. பரி. 22/36-44