இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
127
குருக்கத்தி–குருகு–கத்திகை–மாதவி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | அகவிதழ் பிரிந்தது; டிஸ்கிபுளோரே |
தாவரக் குடும்பம் | : | மால்பிகியேசி (Malpighiaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஹிப்டேஜ் (Hiptage) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | மாடபுளோட்டா (madablota) |
தாவர இயல்பு | : | வன்கொடி (Woody climber). பற்றுக்கோடு கொண்டுதான் முதலில் வளரும். மரங்களின் மேல் சுற்றிப் படர்ந்து வளரும். மிக நீளமானது. |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
இலை | : | தனியிலை; எதிரடுக்கில் பசுமையானது. தோல் போன்றது. இலைச் செதில் அற்றது. 10 செ.மீ-22செ.மீ. 3 செ. மீ.-5 செ. மீ. அகன்று நீண்டது. |
மஞ்சரி | : | நுனி வளர் பூந்துணர். கணுக்குருத்தாகவும் நுனிக்குருத்தாகவும் வளரும் இயல்பிற்று. பல மலர்கள் பூத்த நிலையில் இணரே மாலை போன்று காட்சியளிக்கும். இதனைப் புலவர் கூறுவர். |
மலர் | : | வெண்மை நிறமானது. 5 அகவிதழ்களை உடையது. 15 மி. மீ. முதல் 20 மி. மீ. நீளமானது. |
புல்லி வட்டம் | : | 5 பசிய புறவிதழ்களை உடையது. அடியில் இணைந்திருக்கும் அரும்பில் இவை அகவிதழ்களை நன்கு மூடிக் கொண்டிருத்தலின், பசிய நிறமானதாகத் தோன்றும். |