உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவரை
டாலிக்கஸ் லாப்லாப் (Dolichus lablab,Linn.)

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் அவரை மலரையுங் குறிப்பிடுகின்றார் (குறிஞ். 87)

அவரை நீளமாக வளரும் சுற்றுக்கொடி. இதன் பூக்கள் ஊதா (செம்மை), வெளிர் நீலம், வெண்மை ஆகிய நிறங்களை உடையன.

சங்க இலக்கியப் பெயர் : அவரை
தாவரப் பெயர் : டாலிக்கஸ் லாப்லாப் (Dolichus lablab,Linn.)

இந்நாளில் அவரையில் பல வேறுபட்ட வகைகள் கலப்பு முறையில் உண்டாக்கப்பட்டுள்ளன. இவையனைத்திலும் உண்டாகும் அவரைக்காய்கள் கறிக்கு அமையும்.

அவரை இலக்கியம்

குறிஞ்சிப்பாட்டில் கபிலர்,

“அடும்பர் ஆத்தி நெடுங்கொடி அவரை”.

- குறிஞ். 87
என்று ‘அவரை’யைக் குறிப்பிடுகின்றார். ‘அவரை’ நீண்டு வளரும் ஒரு கொடி. தினையரிந்த புனத்தில் மறுவிளைவிற்காக ‘அவரை’ விதைக்கப்படும் போலும். தினைத்தாளில் அவரைக் கொடி படர்ந்து பனி பெய்யும் முன் பனிக் காலத்தில் பூக்கும் என்று கடுவன் மள்ளன் கூறுவர்.

“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
 கொழுங்கொடி அவரை பூக்கும்
 அரும்பனி அற் சிரம்
-குறுந். 82:4-6

‘அற்சிர அரை நாளில்’ அவரை பூக்குமெனக் கீரன் எயிற்றியனார் காட்டினார். இதன் மலர் பவளம் போன்ற செம்மை நிற-